ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

ஆசிரியருக்குக் கடிதம்

மனிதநேய மருத்துவர்


தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறுகின்ற "மருத்துவ மும் மூடநம்பிக்கையும்" என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்வில் பெரியார் மருத் துவ குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன் அவர்கள் சிறப்பானதொரு உரையை கடந்த மூன்று வாரங்களாக அளித்து வருகிறார்.


கேட்போரை எளிதில் அடையக்கூடிய, ஈர்க்கக்கூடிய, ஏற்கக்கூடிய, சிந்திக்க வைக் கக்கூடிய, மறுப்பு சொல்ல வாய்ப்பில்லாத அளவிற்கு தன் பகுத்தறிவாலும், பரந்து பட்ட மருத்துவ அறிவாலும் சிறப்பான தொரு உரையை வழங்கிவருகிறார். "ஆக்கல், காத்தல்" போன்றவை கடவுள் செயல் அல்ல, அவை தற்போது மருத்து வர்களின் செயலாக இருக்கிறது என்பதை குழந்தைப்பேறு தொடங்கி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை ஆதாரங்களோடு பல்வேறு தரவுகளோடு நிறுவுகிறார். இடை யிடையே தமிழர் தலைவர் அவர்களின் உழைப்பையும் தொண்டையும் அழகாக நினைவு கூருகிறார்.


மருத்துவர் அவர்கள் 8500, முக அறுவை சிகிச்சைகளை செய்து அதிலும் 6,000 சிகிச்சைகளை இலவசமாகவே செய்து, 10 அறுவை சிகிச்சைகளுக்கு தானே குருதிக் கொடை கொடுத்தும் இருக்கிறார் என்பதை அறியும் போது பெரியாரியலை வாழ்வியலாக ஏற்ற வர்கள் தன் வாழ்வை எப்படி எல்லாம் பெருமைப்பட அமைத் திருக்கிறார்கள் என்பதை அறிந்து நெகிழ் கின்றோம், மகிழ்கின்றோம்.


குறிப்பு: (மருத்துவர் வழங்கும் "மருத்து வமும் மூடநம்பிக்கையும்"  (பகுதி 4)  தந்தை பெரியார், அன்னை மணியம்மையா ருக்கு உடல் நோய்கள் தந்த வலிகள் -அதனுடனே ஆற்றிய பணிகள் பற்றிய விரிவான உரை 24.08.2020 மாலை 7:30 முதல் 9 மணி வரை)


- ம. கவிதா,  மாவட்ட கழக மகளிரணித் தலைவர், திருப்பத்தூர்.


No comments:

Post a Comment