“இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா?” தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஆக. 11- தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி நாடா ளுமன்றக் குழு கூட்டத்தில் பங்கேற் பதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி புறப் பட்டு சென்றார்.
இதற்காக சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோத னையை முடித்துச் செல்லும்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சி.அய்.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனி மொழியிடம் இந்தியில் கூறினார்.
ஆனால், கனிமொழி எம்.பி.யோ, “எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்” என் றார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ‘நீங்கள் இந்தியரா?’ என்று கனி மொழியிடம் கேட்டார். இந்தச் சம் பவம் தொடர்பாக தனது டுவிட்ட ரில் பதிவு செய்துவிட்டு, கனிமொழி எம்.பி. டில்லிக்கு புறப்பட்டுச் சென் றார்.
இதுகுறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படை தனது அதிகார பூர்வ டுவிட்டர் பதிவில், உங்களு டைய விரும்பத்தகாத அனுபவத்துக் காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நட வடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலி யுறுத்துவது மத்திய தொழில் பாது காப்பு படையின் கொள்கை அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தி தெரியாது என்று சொன்ன தால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியைப் பார்த்துக் கேட்டுள்ளார்.
இந்திதான் இந்தியன் என்பதற் கான அளவுகோலா? இது இந்தி யாவா? “இந்தி”-யாவா?
பன்முகத் தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதை யுண்டு போவார்கள்!
இவ்வாறு தி.மு.க. தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment