சமூக ஊடகங்களில் சமூகநீதிக்கான நன்றிப் பெருக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 15, 2020

சமூக ஊடகங்களில் சமூகநீதிக்கான நன்றிப் பெருக்கு!

அது 1990 ம் ஆண்டு!  நான் வங்கி பணியில் சேர்ந்து 3 வருடம். ஆண்கள், பெண்கள் என சுமார் 60 பேர் வேலை செய்த  மண்டல அலுவலகம் என்று சொல்லப்படும் நிர்வாக அலுவலகத்துக்கு (REGIONAL OFFICE ) மாற்றப்பட்டு ஒரு  வாரமே ஆகியிருந்தது.


 அங்கே வேலை செய்தவர்களில் நான் தான் ஜூனியர் (Junior). நான் அமர்ந்திருந்த  இருக்கையிலிருந்து  இரண்டு இருக்கை தள்ளி ஒரு பார்ப்பன பெண் ஊழியரின் இருக்கை. அவரைச்சுற்றி ஏதாவது ஒரு விசயம் பற்றி அரட்டை அடிக்கும் ஒரு  கூட்டம்  எப்பொழுதும் இருக்கும். குறிப்பிட்ட அந்த நாளில், அவர்கள் பேசிய தலைப்பு, இட ஒதுக்கீடு!  நடுவரான அந்தப் பெண் மிக ஆவேசமாக தீர்ப்பு வழங்கினார், "இட ஒதுக்கீட்டையே ஒழிக்கனும் சார்! நாம 90 மார்க் எடுத்தாலும் சீட்டு கெடைக்க மாட்டேங்குது! ஆனால், 45/50 மார்க் எடுத்துட்டு இட ஒதுக்கீடுனு வேலைக்கு வந்துடுறாங்க சார்!  அது எப்படி சார் நியாயம்?"


 அந்த கூட்டத்தில் எல்லோரும், இனி இட ஒதுக்கீடு கூடாது என்று 'ஒருமனதாக' தீர்மானம் நிறைவேற்றி, கலைந்து சென்றனர். நான் சற்று நேரம் கழித்து, மெதுவாக அந்த பெண்ணிடம் போய் இயல்பாகப் பேச்சு கொடுத்தேன். 


மேடம் நீங்க எந்த ஊரு?


கும்பகோணம் சார்.


உங்க குவாலிபிகேசன் என்ன? 


எம். ஏ. ஆங்கிலம்!


உங்க கூடப்பிறந்தவங்க? 


ஒரு அண்ணன், ஒரு அக்கா!


அவங்க என்ன படிச்சிருக்காங்க? 


(ஏதோ சொன்னார் எனக்கு இப்போது நினைவில் இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் நன்கு படித்து, இவரைவிட நல்ல பெரிய பதவியில்  இருப்பதாகச் சொன்னார்)


 உங்க அப்பா, அம்மா என்ன பன்றாங்க? 


அப்பா கல்லூரி பேராசிரியர், அம்மா ஸ்கூல் டீச்சர்!


 உங்க தாத்தா,  பாட்டி? 


தாத்தா, சமசுகிருத பேராசிரியர்!  பாட்டி, பாட்டு டீச்சர்!


 உங்க அம்மா வீட்ல...அந்த தாத்தா, பாட்டி?


சார், அம்மா பிறந்தது தஞ்சாவூரு, அதனால, அவங்கள்லாம் தஞ்சாவூர்  அரன்மனையில உத்யோகம் பாத்தவங்க சார்!


அப்படீன்னா, உங்க ஊருல உங்க ஆளுங்க எல்லாரும்  நல்ல வேலையில இருப்பாங்க இல்லையா?


மிகப் பெருமையாக.... ஆமா சார் ஜட்ஜ், கலெக்டர்னு பெரிய பெரிய  பதவில இருப்பாங்க! 


இவ்வளவு கேட்ட என்னிடம் ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தேன். ஏதும் கேட்கவில்லை! என் பெருமைகளை நானே தொடர்ந்தேன்.


"மேடம்,  எனக்குச் சொந்த ஊரு திருச்சி மாவட்டத்துல  துறையூர் பக்கத்துல கொல்லிமல அடிவாரத்துல இருக்க வடக்குபட்டி-ங்குற ஒரு குக்கிராமம் !


எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் சுத்தமா படிக்காத விவசாயிங்க ! அவங்களே படிக்காதவங்கனா எங்க தாத்தா, பாட்டிய பத்தி சொல்லவே வேணாம்.. எங்க பரம்பரைக் குலத் தொழிலே விவசாயம் தான்!  கூலி வேல தான்!  எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, நீ 6 மாச குழந்தையா இருக்குறப்போ,  'மே' மாச வெயில்ல, மரக் கிளையில ஒன்னய தொட்டிகட்டி போட்டுட்டு,  கரும்பு வெட்டும் போது திடீர்னு சரியான இடி, மின்னலோட மழை வந்துருச்சி, ஒதுங்கக் கூட எடமில்ல! ரெண்டு மணி நேரம் மழை விடல! ஒரு மா மரத்து அடியில மழை விடுற வரைக்கும் ஒன்னய மடிலயே வச்சிருந்தேனு சொல்லுவாங்க!


நானெல்லாம் அப்படித்தான் வளர்ந்தேன். வீட்ல கம்பஞ்சோறு, சோளச்சோறு, கேப்பை களி இதுதான்  மூனு வேளையும்! நெல்லுச் சோறு  எப்பவாச்சும் தான்!


காலைல அப்பா, அம்மா  உழுவதற்கு ஏர் கலப்பை, மாடு, மண்வெட்டி,  கூடையில  காலை, மதியம் ரெண்டு வேளைக்கும் கஞ்சி எல்லாம் எடுத்துக்கொண்டு,  வயலுக்குப்  போகும் போது, துணைக்கு எதையாவது எடுத்துக் கொண்டு நானும் போகனும்.


9 மணிக்கு ஒரு 'பஸ்சு' வரும் அதுதான்  எங்களுக்கு "ஷ்ணீறீறீ நீறீஷீநீளீ". அதைப் பார்த்தவுடன் வயலில் வேல செஞ்ச அழுக்கு டிராயர் -சட்ட யோட  ஸ்கூலுக்கு ஓடுவேன்.


படிக்கனும்னு ஸ்கூலுக்கு போகல .. ரெண்டு விசயத்துக்காக ஸ்கூலுக்கு போவேன்  ஒன்னு, மதியம் சாப்பாடு  கெடைக்கும்... கோதுமை கஞ்சி, அந்த  சூழ்நிலையில் அது நல்லாருக்கும். அத சாப்பிட! ரெண்டாவது, ஸ்கூலுக்கு போகாவிட்டால் வெயில், மழையில் நாள் முழுவதும்  வயலில்,  நானும் அவர்களோடு  இருந்து ஏதாவது வேலை செய்யனும்! அதுக்கு பயந்து ஸ்கூலுக்கு போய்விடுவேன்.


 மாலை ஸ்கூல்  முடிஞ்சதும் நேரா வயலுக்குத் தான் போகனும். இல்லைனா அடி விழும். மாலையில், இருட்டி  இனி வயலில் வேலை   செய்ய முடியாது என்ற நேரத்துல தான் இருவரும் வீட்டுக்கு வருவாங்க!  அவர்களோடு நானும் வருவேன்.


 வீட்ல ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு தான் இருக்கும். சமைக்க அத  அம்மா வச்சிக்குவாங்க. தெருவுல பசங்களோட விளையாடுவேன் இல்லையானால், வயலில் வேல செஞ்ச களைப்புல வீட்ல ஒரு  மூலைல படுத்து தூங்கிடுவேன். அம்மா எழுப்பி, சாப்பிட வைப்பாங்க.


 தினமும் இது தான். என்னை படினு யாரும் சொன்னதில்லை! படித்தாலும்  தெரியாததைச் சொல்லிக் கொடுக்க யாரும் கிடையாது !  இது எனக்கு மட்டும் இல்ல, எங்க தெருவில் சுமார் 60 வீடு இருக்கும் .60 வீட்டில் உள்ள என் வயது பையன்கள் அனைவர் நிலையும் இது தான்!


5ம் வகுப்புல நான் தான் ஸ்கூல்  first. என் ஆசிரியர் (பாலசுப்பிரமணியன் என்ற ஐயர் - HM) என் அப்பாவை வரச்சொல்லி,   "நீ பாட்டுக்கு இவன  வேலைக்கு அனுப்பிடாத, படிக்க வை,  நல்லா படிப்பான்!"  என்று சொல்லி TCகொடுத்தார். அதற்குப் பிறகு, துறையூர்  டவுன் -ல்  அரசு விடுதியில் தங்கி ஒரு  நல்ல ஸ்கூலில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது !  வாய்ப்பைப் பயன்படுத்திப் படித்தேன்.


 எப்படியோ சிரமப்பட்டுப் படித்து டிகிரி வாங்கி,  இல்லாமை , வறுமை, ஏழ்மை   என்கிற கொடிய கஷ்டம் எங்களுக்கு மட்டும்  இந்த நாட்டில் உண்டு! அதையெல்லாம் கடந்து,' பேங்க்' தேர்வு எழுதி, இப்போது நம்ம பேங்க் வேலைல சேர்ந்து விட்டேன். இது போன்ற சூழ்நிலை எனக்கு மட்டும் அல்ல !  இந்த நாட்டில் என் சமூகத்தைச் சேர்ந்த 25கோடி பேருக்கும் உண்டு! . 


உங்க குடும்பத்தில் , உங்க தெருவில் , இந்த நாட்டில் உள்ள உங்க சாதிக்காரர்கள் எல்லாருமே படித்தவர்கள் , உங்களுக்கு  உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி  உங்களுக்கு பாடத்தில் தெரியாததை வீட்டில் சொல்லித்  தருவார்கள்.  இல்லையெனில், பக்கத்து வீட்டில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எதுவும் இல்லையென்றால், டியூசன் வைத்துக்கொள்ள முடியும்.


ஆனால் நாங்கள்? எங்கள ஸ்கூலுக்கு போ-னு  சொல்ல, படி-னு சொல்ல ஆள்  கெடையாது . எங்களுக்கு எதுவும் சந்தேகம்-னா யாருகிட்ட கேட்க முடியும்? உங்கள மாதிரி அம்மா, அப்பா,  தாத்தா, பாட்டிகிட்ட கேக்கவோ, பக்கத்து வீட்டுகாரன்கிட்ட கேக்கவோ, டியூசன் வச்சுக்கவோ முடியாது. 


அப்படிப்பட்ட சூழ்நிலையில் படிச்ச எனக்கும், உங்களுக்கும் போட்டி  வச்சா, நீங்க ஜெயிப்பீங்களா? நான் ஜெயிப்பேனா சொல்லுங்கள்!


நான் எதற்காக அவரிடம் பேச வந்தேன் என்பதைச் சற்றே உணர்ந்தவராய், என்னை நிமிர்ந்து பார்த்தார். "சொல்லுங்க மேடம்! உங்களுக்கும் ,எனக்கும் போட்டி வச்சா நீங்க ஜெயிப்பீங்களா இல்ல நான் ஜெயிப்பேனானு  கேட்டேன், நீங்க ஒன்னுமே சொல்லலையே! கொஞ்சம் முன்னாடி ஒதுக்கீட்டையே ஒழிக்கனும் சார்-னு தீர்ப்பு சொன்னீங்க" என்று மிகவும் அமைதியாக கேட்டேன்.


 அவர்  சற்றே மெதுவாக, நான் தான் ஜெயிப்பேன் சார் என்றார். 


"அதுக்காகத்தான் மேடம் எங்களுக்கு க்ஷீமீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ! ஒரு  லீணீஸீபீவீநீணீஜீஜீமீபீ ஆளோட என்னய ஓட விட்டா, நான் எப்படி ஜெயிப்பேனா அப்படித்தான் நீங்களும், நானும்   பரீட்சை எழுதினா, நீங்கதான் கண்டிப்பாக ஜெயிப்பீங்க! க்ஷீமீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ  இருந்ததால் தான் அந்த சூழ்நிலையில படிச்ச நான், இன்னைக்கு ஒங்களுக்கு சமமா வேலை செய்ய முடியுது.  இன்றைக்கு உங்களுக்கும், எனக்கும் சமமான வாய்ப்பு கெடச்சிருக்கு! இனி வேணும்னா உங்க பிள்ளைகளுக்கும், என் பிள்ளைகளுக்கும் போட்டி வச்சுக்கலாம் அதுக்கு நான் ரெடி"  என்றேன் .


கொசுறு செய்தி : என் மகள் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் (ரிக்ஷிஷி- சிஙிஷிணி) 12ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு,  பாண்டிச்சேரி கேரளா மாநிலங்கள் அடங்கிய மண்டலத்தில் ஆங்கில பாடத்தில் மண்டல அளவில் முதல் மதிப்பெண் 96% எடுத்தாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது! (எழுதியவர் பெயரின்றி வாட்ஸ் அப்பில் வைரல் ஆன கட்டுரை)


No comments:

Post a Comment