மனிதக் கழிவுகளால் பம்பா நதி பாழ்பட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

மனிதக் கழிவுகளால் பம்பா நதி பாழ்பட்டது!

சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேட்டைப்பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.1.1998) வெளியிட்டு இருந்தது. அதையும் கொஞ்சம் பார்க்கலாம்.



பத்தனம்திட்டா: ஜன.23, கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பக்தர்கள் வரும் யாத்திரைக் காலம் முடிவடைந்துவிட்ட போதும், பம்பா நதி ஏற்கெனவே ஒரு பெரும் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு மாசடைந்து பாழ்பட்டுவிட்டது.


ஜனவரி 19 அன்று சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது முதல், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டன.


பம்பை நதிக்கரையில் தேவஸம் போர்டால் தோண்டப்பட்ட கக்கூஸ் குழிகளில் மலம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது; அவற்றை வெளியேற்ற வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


மனிதக் கழிவுகளை அகற்றும் பணியை ஒப்பந்தக்காரர்கள் நிறுத்திவிட்டு மலைக்கோவிலை விட்டுச் சென்றுவிட்டனர். தேவஸம் அலுவலர்களும் எந்தவித மனச்சாட்சியும் இல்லாமல் கோவிலை விட்டுச் சென்று விட்டனர்.


67 நாட்களாக மனிதக் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த சேரியின வட்டத்தில் உள்ள பெரிய குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. சபரிமலையில் ஏற்கெனவே பாழ்பட்டிருக்கும் சுற்றுச் சூழலுக்கு, இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அண்மையில் வழங்கப்பட்ட கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில், இந்தக் குழிகள் முறையாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


சபரிமலையில் தொடங்கும் பம்பா நதியின் கிளை நதியான ஜுநகர், ஒரு மாபெரும் மனிதக் கழிவுத் தொட்டியாகவே மாறிவிட்டது. பண்டிதவளத்தில் இருக்கும் உணவு விடுதிக் கழிவுகளும், கக்கூசுகளில் இருந்து மனிதக் கழிவுகளும் நேரடியாக இந்த ஆற்றில் விடப்படுகிறது.


No comments:

Post a Comment