திருவாரூர், ஆக. 21- புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம் 17.8.2020 அன்று மாலை 6:30 மணிக்கு திருவாரூர் மண்டல மாணவர் கழகம் சார்பில் காணொலி வாயி லாக திருமருகல் ஒன்றிய மாணவர் கழகச் செயலாளர் மு.இளமாறன் கடவுள் மறுப்பு கூற, திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் அனை வரையும் வரவேற்றார். மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் கே.கோபால், மாநில மருத்துவரணி துணை அமைப்பா ளர் மருத்துவர் க.சவுமியா மண்டல மக ளிரணிச் செயலாளர் செந்தமிழ்செல்வி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் திருத் துறைப்பூண்டி குகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நிகழ்வை ஒருங்கிணைத்தும், தலைமை யேற்றும், உரையாற்றிய மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் நாத்திக. பொன் முடி, நிகழ்வில் சிறப்பு அழைப்பாளரான கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தலைமை கழக பேச்சாளர் வழக்கு ரைஞர், பூவை.புலிக்கேசி சிறப்புரையாற் றினார்.
புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பி னையும், விடுதலையில் ஆசிரியர் அவர்கள் எழுதும் அறிக்கையினையும், மாணவர்கள் மத்தியில் பேசி ஆசிரியர் அவர்கள் செயல் படுத்தும், எழுதும் எழுத்தும்தான் சரியான வெற்றிக்கு வழிவகுக்கும். அதன்படி நடப் போம் என குறிப்பிட்டார்.
நிகழ்வில் நாகை மாவட்டச் செயலாளர் புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்டச் செய லாளர் வீர.கோவிந்தன், திருமருகல் மாணவர் கழகப் பொறுப்பாளர் ஆதித்யன் மற்றும் தோழர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இறுதியாக நாகை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்.மு.குட்டிமணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment