பத்திரிகை, ஊடகத்துறையினர், தனி நபர் தாக்குதல்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 4, 2020

பத்திரிகை, ஊடகத்துறையினர், தனி நபர் தாக்குதல்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி - ஊடகக் கண்காணிப்புக் குழு வலியுறுத்தல்


சென்னை, ஆக. 4- தமிழக காவல்துறை டிஜிபியிடம் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி ஊடகக் கண் காணிப்புக் குழு சார்பில் புகார் அளிக் கப்பட்டுள்ளது.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா வது, இந்திய மாநிலங்களில் முன் மாதிரியான பாரம்பரியம் மிக்க தமி ழக காவல்துறை தங்களைப் போன்ற நேர்மையான நெறிமுறைகளோடு மக்களுக்கான காவல் பணிபுரியும் தலைமையின்கீழ்  இயங்குவது உள்ள படியே பெருமைக்குரிய விஷயமாகும். தங்கள் கவனத்திற்கு வந்த பெரும்பா லான பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்றா லும் காவல்துறையைப் போன்றே மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர்மீதான தனிநபர் தாக்குதல்கள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன என்பதையும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.


குறிப்பாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் அரசியல் பின்புலம் கொண்ட சமூக விரோதிகள்மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்ப தில்லை. மாறாக, பத்திரிக்கையாளர் கள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீது  இவர்கள் யாரேனும் புகார் கொடுத் தால் உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படுகின்ற  பாரபட்சப் போக்கு நிலவுகிறது. (இதற்கான சான்றுகள் பிற்சேர்க்கை 1இல் தரப்பட்டுள்ளன).


இதோடு, பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண் கள் மீதான தனிநபர் தாக்குதலையும், தரம்கெட்ட, ஆபாசமான விமர்சனங் களையும் மத்திய, மாநில ஆளுங்கட் சிகளின்ஆதரவாளர்கள்  தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது  வேதனைக்குரிய செயலா கும். (இதற்கான சான்றுகள் பிற் சேர்க்கை 2 இல் தரப்பட்டுள்ளன)


இதேபோன்று தமிழகத்தில் அர சியல்மயப்படாத ஆனால் சமூகத் தின்மீது அக்கறை கொண்ட இளை ஞர்கள், சமூக ஊடகங்கள் வழியாக நியாயமான தங்கள் உரிமைக்கான குரலைப் பதிவிடுகிறபோது அவர்கள் தனிநபர் தாக்குதல்களுக்கு உள்ளா கிறார்கள். குறிப்பாக, இளம்பெண்கள்  தரக்குறைவாக, ஆபாசமாக விமர்சிக் கப்படுவதோடு மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள்.


இந்த மாதிரியான சமூக விரோதி களின் மீது புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையின் மெத் தனப்போக்கு கவலை தருவதாக இருக்கிறது. (இதற்கான சான்றுகள் பிற்சேர்க்கை 3இல் தரப் பட்டுள்ளன)


முக்கியமாக, பொதுவாழ்வில் ஈடு பட்டு மக்கள் பணியாற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள், சமூக இயக்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர் கள் மீது அபாண்டமாக அடிப்படை யற்ற அவதூறுகளை வேண்டுமென்றே பரப்புகின்ற, கொலை மிரட்டல் விடுக்கின்ற சமூக விரோதிகள் (ஆளும் கட்சிகளின் மறைமுக ஆதர வாளர்கள்)  மீது புகார் கொடுத்தால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை..(இதற்கான சான்று கள் பிற்சேர்க்கை 4இல் தரப்பட்டு உள்ளன)


எனவே, இவற்றின் மீது தனிக் கவனம் செலுத்தி பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும், சமூக அக்கறையோடு செயல்படும் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண் களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கி,பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக இயக்க நிர்வாகி கள் மற்றும்  ஆர்வலர்கள் மீதான களங்கத்தை போக்கி ஜனநாயகத்தின் அடிநாதமான கருத்துரிமையைக் காத்திட தாங்கள் தங்களுக்கே உரிய வேகத்துடன் கூடிய விவேகமான நட வடிக்கைகளை எடுக்குமாறு அன் போடு கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.


 


No comments:

Post a Comment