குண்டு துளைக்காத சட்டை ஆவடி தொழிற்சாலையில் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

குண்டு துளைக்காத சட்டை ஆவடி தொழிற்சாலையில் தயாரிப்பு

சென்னை, ஆக. 14- ஆத்ம நிர்பார் பாரத் அபியான் சுயசார்பு இந்தியா திட்டத்தை தொடங்கும் விதமாக, சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள இராணுவச் சீருடை தொழிற்சாலையில் தயாரிக் கப்பட்டுள்ள குண்டு துளைக்காத சட்டைகளை தமிழக காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆவடியில் 12.8.2020 அன்று நடந்தது. இராணுவ தொழிற்சாலைகளின் தலைவர் ஹரி மோகன் தலைமை தாங்கினார். கூடுதல் இயக்குநர் ஜெனரல் சி.எஸ்.விஸ்வகர்மா, உறுப்பினர் ஏ.கே.ஜெயின் உள்பட அதிகாரிகள் டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு காணொலி மூலமாக பங் கேற்றனர்.


அதே சமயத்தில் ஆவடியில் நடந்த விழாவில், இராணுவ தொழிற்சாலைகளின் பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ், அதிகாரிகள் தமிழகக் காவல்துறையினருக்காக தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டையின் முதல் தொகுதியை, தமிழக காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. (தலைமையகம்) சீமா அகர்வாலிடம் வழங்கினர். அப்போது மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை அய்.ஜி. சோனல் மிஸ்ரா, காவல்துறை அதிகாரிகள் கே.செந்தில்குமாரி, M.S யாமளா தேவி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தமிழகக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத சட்டை ஆவடி இராணுவச் சீருடை தொழிற்சாலை யில் வடிவமைக்கப்பட்டு, அங்கேயே முழுமையாகத் தயாரிக் கப்பட்டுள் ளது. கைத்துப்பாக்கிகள், ஏ.கே.47 மற்றும் 7.62 எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். உயர் அழுத்த தண்ணீரையும் உள்ளே விடாது. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இந்த குண்டு துளைக்காத சட்டையில் உள்ளன.


No comments:

Post a Comment