நெடுவாக்கோட்டை கு.வீரமணி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 19, 2020

நெடுவாக்கோட்டை கு.வீரமணி மறைவு


உரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி வை.குப்புசாமி-குஞ்சம்மாள் ஆகியோரின் மகனும், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, கு.ஆனந்தன், கு.வைத்திலிங்கம் ஆகியோரது அண்ணனும், அகிலன் மளிகை உரிமையாளர் வீ.அகிலன் தந்தையும், உரத்தநாடு லிட்டில் ரோஸ்  பள்ளியின் உரிமையாளருமான கு.வீர மணி உடல் நலக்குறைவால் மறைவுற்றார்.


செய்தியறிந்தவுடன் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் கு.அய்யாத்துரையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறு தல் கூறினார்.


இறுதி நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநிலஅமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், செஞ்சிலுவைச் சங்கத்தலைவர்  தெலுங்கன்குடிக்காடு இராசமாணிக்கம், உரத்தநாடு ஒன்றியத்தலைவர் த.செகநாதன்,  கழகப்பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றியச்செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வம், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச் செல்வம், பேராசிரியர்கு.குட்டிமணி, மாணவர் தாளக உரிமையாளர் நெடுவை.கு.கவுதமன், கு.இளந்திராவிடன்,  கு.லெனின், பொறியாளர் ந.நேரு, தொழிலதிபர் கே.எஸ்.பி ஆனந்தன், பெஸ்ட் சுரேந்தர், கே.எஸ்.பி.ஆ.சக்ரவர்த்தி, திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் இரா.சிவக்குமார், நெடுவை ந.செயசீலன், தி.வள்ளுவன், எலந்தவெட்டி கந்தசாமி, விவசாய சங்கத் தலைவர் கு.செந்தமிழ் செல்வன்,  தஞ்சை தர்மராசன் வேர்ட்ஸ் வொர்த் பெரியார்மணி ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment