சமூக வலைதளங்களுக்கு தணிக்கை வாரியம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 6, 2020

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை வாரியம் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,ஆக.6, சமூக வலை தளங்களில் பதிவிடப்படும் காட்சிப் பதிவுகளை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தர விடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கரோனா காரண மாக பள்ளிகள் மூடப்பட்டு மாண வர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருவதாலும், பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டி லிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிப்பதிவுகள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப் பிட்டுள்ளார்.


குறும்படம் என்ற பெயரில் ஆபாசக் காட்சிப்பதிவுகள் அதிகம் பதிவிடப்படுவதாக மனுவில் சுட் டிக்காட்டியுள்ள அவர், இந்தியா வில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் போதிலும், அதற்கென எந்தவிதத் தணிக்கை முறையும் இல்லை எனவும், திரைப்படங்களை தணிக்கை செய்ய தணிக்கை வாரியம் உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


காட்சிப்பதிவுகளை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் காட்சிப் பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.


இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு நேற்று (ஆக.5) விசார ணைக்கு வந்தது இது முக்கியமான வழக்கு என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர் பாக நான்கு வார காலத்திற்குள் மத்திய மற்றும் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டனர்.


 


No comments:

Post a Comment