விநாயக புராணம்
தடையை மீறி கடலில் பிள்ளையார் பொம்மைகளைக் கரைக்க வந்தால், அதனைத் தடுக்க சென்னை மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
பக்தர்கள் எந்த அளவு சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
இது மட்டும் மீறல் இல்லையா?
விநாயகர் சிலைகளை வழிபட்ட பின்னர் அந்த சிலைகளை கோவில்கள் முன்பு வைத்துச் சென்றால், அவற்றை இந்து அறநிலையத் துறை
நீர் நிலைகளில்
கரைக்கும்.
இந்து அறநிலையத் துறைக்கு இதுதான் வேலையா? நீர் நிலைகளில் கரைத்தால், அவை மாசுபடும் - சுற்றுச்சூழல் கெடும் என்பதை ஓர் அரசுத் துறையே மீறலாமா?
இந்தப் புத்தி
இந்து முன்னணிக்கு வருமா?
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை பூஜை நடக்க, அதில் முஸ்லிம், கிருத்துவர், இந்து முன்னணியினர் பங்கேற்பு.
இப்பொழுது மட்டும் முஸ்லிம்கள் வேண்டும்; இஸ்லாமியர்களுக்கு உள்ள தயாள குணம் இந்து முன்னணிகளுக்கு வருமா?
எல்லைக்குச் செல்லுவாரா
ரபேல் விநாயகர்?
சென்னையில் பி.ஜே.பி. அலுவலகத்தில் ரபேல் போர் விமான மாதிரியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு.
சீனா - இந்திய எல்லையில் விநாயகரை நிறுத்த வேண்டியதுதானே!
No comments:
Post a Comment