பி.ஜே.பி.யின் அற்பத்தனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 13, 2020

பி.ஜே.பி.யின் அற்பத்தனம்

பெரியாரின் உறவினர் ஒருவர் பி.ஜே.பி.யில் சேர்ந்தார் என்று ஒரு செய்தியை ஒரு தமிழ் ஏடு படத்துடன் வெளியிட்டுள்ளது.


பெரியாரின் அம்மாவும் - பி.ஜே.பி.யில் சேர்ந்த ஒரு நபரின் கொள்ளுப்பாட்டியும் சகோதரிகள் என்று சுற்றி சுற்றி வளைத்துப் பெரியாருடன் சொந்தம் கொண்டாடுவதும், அதனை ஒரு கட்சி விளம்பரப்படுத்தவும், அதனை ஒரு தமிழ் நாளேடு படத்துடன் மூன்று பத்தி செய்தி போடுவதும்  எவ்வளவுக் கீழிறக்கம்!


பி.ஜே.பி.யில் சேர்வோர் யார்? யாருக்குச் சொந்தம் என்று ஜாதகம் கணிப்பார்களோ!


எவ்வளவு அற்பத்தனம் - பலகீனம்!


 


பி.ஜே.பி. ஆட்சிபற்றி தொழிலதிபர் நாராயணமூர்த்தி


இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் (11.8.2020) ‘கரோனா பாதிப்புக் காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு இந்தியா வீழ்ச்சி அடையும்' என்று குறிப்பிட்டார்.


காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இதனை தம் டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


போதைப் பொருள் கடத்திய பா.ஜ.க. ஆசாமி கைது!


திருச்சியில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் கைது.


பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் - வழக்குரைஞர் பி.அடைக்கலராஜ் என்பவர் போதைப் பொருள் கடத்தினார். காவல்துறை கையும் களவுமாக அந்த ஆசாமியைப் பிடித்தது. இப்பொழுது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இவர் பி.ஜே.பி. முக்கிய தலைவர்களுடனும், மேனாள் மத்திய அமைச்சருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதற்கான புகைப்படங்களும் வெளிவந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 


பி.எஸ்.என்.எல். தனியார்மயமா?


வாங்கிக் கட்டிக்கொண்ட பி.ஜே.பி. எம்.பி.,


அரசு நிறுவனமான


பி.எஸ்.என்.எல். தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும், அதில் பணியாற்றுவோர் தேசத் துரோகிகள் என்றும் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்த கருநாடக மாநில பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே பேச்சுக்கு, பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment