சென்னை, ஆக. 4 கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் வேலையின்மை விகிதம் தேசிய சராசரி விகிதத்தைவிட உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரலில் 43.8% ஆகவும், மே மாதத்தில் 33% ஆகவும், ஜூன் மாதத்தில் 13.1% ஆகவும் வேலைவாய்ப்பின்மை பதிவாகி இருந்தது. என்றாலும் தேசிய சராசரி வேலைவாய்ப் பின்மை விகிதம் 7.7% ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜூலை மாத விகிதம் 8.1% ஆக பதிவாகி உள்ளது. இந்த விகிதம் தொழில்கள் நிறைந்த மாநிலங்கள் ஆன மராட்டியத்தில் 4.4% ஆகவும் குஜராத்தில் 1.9% ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமானப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது ஒரு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங் களில் பொதுப் போக்குவரத்து தொடங் காமல் இருப்பதும் இதற்கு ஒரு கார ணமாகக் கூறப்படுகிறது. தற்போது வட மாநிலத் தொழிலாளர்களைக் கட்டுமான நிறுவனங்கள் விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment