பள்ளிக் கூடங்களில் எல்லோருடைய பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் யார்? பார்ப்பனர்கள் என்பதை எவர் மறுக்க முடியும்? அவர்கள் எதற்காக படிக்கின்றார்கள்? சங்கராச்சாரி யாகவா? ஜீயர்களாகவா? மாதம் மூன்று மழை பெய்யச் செய்யவா? ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ளவா? இல்லவே இல்லை. அது உத்தியோகம் பெறுவதற்கென்பது யாருக்காவது தெரியாமல் இருக்குமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 8.04.1928
‘மணியோசை’
No comments:
Post a Comment