நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை - மலர் வெளியீடு!
சென்னை, செப்.17 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2020) பெருவிழாவையொட்டி தமிழர் தலைவர் அவர்கள் அய்யா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை' மலரை வெளியிட்டார்.
தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2020) அமெரிக்கா, அய்ரோப்பா யூனியன், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் பல மாநிலங்களிலும், தமிழ கத்தில் பட்டிதொட்டி எங்கும் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழர் தலைவர் மரியாதை
சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைப் பீடத்திலும், நினைவிடத்திலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் கழகக் காப்பாளர் க.பார்வதி, முனைவர் ஜானகி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பெரியார் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மலர் வெளியீடு
இதையடுத்து தந்தை பெரியார் நினைவிட நுழை வாயிலில் திராவிட வரலாற்றுக் கல்வெட்டு அருகே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு ‘விடுதலை' மலரை வெளியிட, திராவிடர் கழக துணைப் பொதுச்செய லாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, கழக அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், பெரி யார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், டாக்டர் மீனாம்பாள் உள்ளிட்டவர்கள் தமிழர் தலைவரிட மிருந்து ‘விடுதலை' மலரை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திருமதி மோகனா அம்மையார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சி.வெற்றிச்செல்வி, சந்திரா முனுசாமி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், கோ.செல்வராஜ், திண்டிவனம் சிறீராமு மற்றும் கழகத் தோழர்கள், தோழியர்கள் பெரியார் திடல் அனைத்துப் பிரிவு பணித் தோழர்கள் பங் கேற்றனர்.
No comments:
Post a Comment