பெரியார் பிறந்த நாள் பரிசு - ‘விடுதலை' சந்தாக்களே!
கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவரின் வேண்டுகோள்
பெரியார் பிறந்த நாள் பரிசு என்பது ‘விடுதலை'யே - சந்தா சேர்க்க முனைவீர் என்று கழகத் தோழர்களுக்குக் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் கொள்கைக் குடும்பத்தவர்களே,
கரோனா கொடுந்தொற்றுக் காலத்திலும் தொய் வின்றிக் கழகக் கடமையாற்றும் அருந்தோழர்களே,
பலரது விருப்பத்திற்கும், வேண்டுகோளுக்கும் இணங்க நமது ஏடுகளான பிரச்சாரப் போர்க் கருவிகளாம் ‘‘விடுதலை'', ‘‘உண்மை'', ‘‘பெரியார் பிஞ்சு'', ‘‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்'' ஆகிய ஏடுகள் பழையபடியே உரிய பக்கங்களுடன் - நாளேடு, மாதமிருமுறை, மாத ஏடு என்று அஞ்சல்மூலமும், நேரிலும் விநியோகிக்கப்படவும், பரப்பப்படவும் உள்ளன - ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன!
சந்தாக்களைச் சேர்த்து அனுப்பி உங்கள் பங்கை உயிர்க் கடமையாகக் கருதி உற்சாகமூட்டுங்கள்!
‘விடுதலை'யின் நட்டம் - பொருளாதாரத்தில்,
‘விடுதலை'யின் லாபம் - லட்சியம், கொள்கை வெற்றி!
தஞ்சைத் தோழர்கள்
முந்துகின்றனர்!
வழமைபோல தஞ்சையில் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், நகரத் தலைவர் பா.நரேந்திரன், நகர செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் முந்திக் கொண்டுள்ளனர்.
பெரியார் நாடு உரத்தநாடு அதன் பங்கை தனித்தன்மையோடு செய்ய ஆயத்தமாகிவிட்டது!
ஒவ்வொரு மாவட்டமும், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பணிகளைத் தொடங்கி, ‘பெரியார் பிறந்த நாள் பரிசாக' ‘விடுதலை' சந்தாக்களைச் சேர்த்து (குறைந்தது 6 மாதம், ஓராண்டு சந்தாக்கள்) அனுப்புங்கள்!
ஒருவர் குறைந்தது இரண்டு என்றால்கூட, எளிதில் 20 ஆயிரம் சந்தாக்களை இம்மாத இறுதிக்குள் சேர்த்து வரலாறு படைக்கலாமே!
முந்துங்கள்!
ஊக்கத்துடன் உழையுங்கள்!
அனைத்து இடர்களையும் கடந்து, கன்னியாகுமரி முதல் திருத்தணிவரை ஊக்கத்துடன் உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகள்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
11.9.2020
No comments:
Post a Comment