பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் மலேசியாவில் 18ஆவது பெரியார் நூலகம் அமைக்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் மலேசியாவில் 18ஆவது பெரியார் நூலகம் அமைக்கப்பட்டது


கோலாலும்பூர். செப். 14- தலைநகரி லிருந்து சுமார் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந் துள்ள களும்பாங் தோட்ட அரசு தமிழ்ப்பள்ளியில் பதினெட்டா வது பெரியார் நூலகம் திறக்கப் பட்டது. இப்பள்ளியில் சுமார் நூறு மாணவர்கள் பயில்கிறார்கள். பதினான்கு ஆசிரியர்கள் பணிபுரி கிறார்கள்.


இந்த நூலகத்தில்  தந்தை பெரியார், டாக்டர் கி. வீரமணி மற்றும் திராவிடர் இயக்க தலை வர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான நூல்கள் அய் நூறுக்கு மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பெரியார் பற்றிய குறும் படம் திரையிடப்பட்டது. மூன்று மாணவர்கள் பெரியார் வரலாறு குறித்து மிகச்சிறப்பாக பேசினார்கள்.


நூலகத்தை பெரியார் பன் னாட்டு (மலேசியா)அமைப்பின் தலைவரும், தோட்ட நிர்வாகிகள் (சபா) மன்ற தலைவருமான மு. கோவிந்தசாமி திறந்து வைத்து,  பெரியாரின் தொண்டறம், சிறப்பு சமூக செயல்பாடுகளை விளக்கி னார். பள்ளியின் தலைமை ஆசிரி யர் நிறைமலி சீலா தேவி தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேனாள் தலைமை ஆசிரியர் நிறை மலி முத்துமணி, துணைத்தலைமை ஆசிரியர் சுப்ரமணியம், ஆசிரி யர்கள், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்கள் கோ. ஆவுடையார், கு.க. இராமன், மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர். இந்த தோட்டத்திற்கு அருகில் உள்ள தஞ்சோங் மாலிம் நகருக்கு பெரியார் 1929, 1954இல் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.


பெரியாரின் பிறந்தநாளை முன் னிட்டு மேலும் இரண்டு நூலகங் கள் அமைக்கப்படும் மற்றும் 2 மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் அன்பளிப்பாக வழங்க திட்டமிடப்படுள்ளது.


No comments:

Post a Comment