நாடாளுமன்றத்தில்  நேற்று (19.9.2020) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

நாடாளுமன்றத்தில்  நேற்று (19.9.2020)

டி.ஆர்.பாலு


இதர பிற் படுத்தப்பட்ட


பிரிவினர்க்கான வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த் திட வேண்டும்



நாடா ளுமன்ற மக்களவையில் பேசிய தி.மு.க மக்களவை உறுப் பினர் டி.ஆர்.பாலு, மருத்துவப் படிப்பு உள்பட அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முற் றிலும் புறக்கணிக்கப்பட் டுள்ளனர். தமிழகத் திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த அவலம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என குற்றஞ்சாட்டினார்.


இதுதொடர்பாக ஏற்கெனவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதர பிற்படுத்தப் பட்ட இடஒதுக்கீடு குறித்து கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி வருகிற 26 அக்டோபர் 2020க்குள் மூவர் குழு அறிக்கையை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


மேலும், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக் கான அனைத்து வகை தேர்வுகளி லும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (ணிகீஷி) மிகக் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்களே நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது.


இதனால், இதர பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர் அதிக மதிப் பெண்களை பெற்றிருந்தாலும் அவர்களால் அரசுப் பணிகளில் சேர முடியாத அவலம் நிகழ்கிறது இதுதொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலி யுறுத்தினார்.


பிற்படுத்தப்பட்டோர்க்கான வருமான வரம்பை ரூ.8 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாக உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் 2015-ஆம் ஆண்டே மத்திய அரசிற்கு பரிந் துரை செய்து அறிக்கை அளித் துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினர்க்கான ஆண்டு வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்திட வேண்டும் என பேசியுள்ளார்.


தமிழச்சி தங்கபாண்டியன்


மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்:


மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்



தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்து வதற்கு தமிழ் நாடு அரசிட மிருந்து மத்திய அரசு ஏதாவது கோரிக்கையைப் பெற்றுள்ளதா? அப்படி பெற்றிருந்தால் அதற்கு அரசின் நடவடிக்கை என்ன? என்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப் பிய கேள்விக்கு, 


மும்மொழிக் கொள்கையில் மாற்றம் இல்லை. 'புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும். மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்த மொழியும் திணிக்கப்படாது. மாணவர்கள் விரும்பும் மொழியைப் படிக்கலாம்,' என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.


பி.வில்சன் (திமுக):


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிய மனங்களில் சமூக நீதியும் பன்முகத் தன்மையும் உறுதி செய்யப் பட வேண்டும்



 அண்மைக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துப் பிரிவினர் பிரதி நிதித்துவம் இல்லாத ஒரு குழப்பமான போக்கு நிலவுகிறது. நீதிபதி நியமனங்களில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்  சேர்ந்தவர்கள், தகுதி மிக்கவர்கள் இருந்தும், வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாடாளுமன்றமும் அரசும் சமூக நீதியை நிலை நாட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


எம்.சண்முகம் (திமுக):



தொற்று நோய் திருத்த மசோதா-2020 மீது நடந்த விவாதத்தில் முன்னறிவிப்பின்றி ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் கடும் இன் னலுக்கு ஆளானார்கள். அவர் களை நகரங்களுக்கு அழைத்து வந்து இறப்பதற்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.


No comments:

Post a Comment