கப்பலோட்டிய தமிழர், சமூகநீதிப் போராளி வ.உ.சி.யின் தியாகத்தை வாழ்த்துவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

கப்பலோட்டிய தமிழர், சமூகநீதிப் போராளி வ.உ.சி.யின் தியாகத்தை வாழ்த்துவோம்!


இந்திய வரலாற்றில் வேறு எவரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்குச் சென்றவர் - தனது ஒப்பற்ற தியாகத்தின்மூலம் ‘கப்பலோட்டிய தமிழர்' என்று அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்கள்!


அவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள்ளோ, கட்சி வட்டத்திற்குள்ளோ அடைத்துவிட முடியாது; கூடாது.


தான் கொண்ட கொள்கை, லட்சியத்திற்காக ஒரு மனிதர் தனது வாழ்வையே அழித்துக்கொண்ட தியாக மெழுகுவத்தி அல்ல - தியாகச் சுடர்; என்றும் அணையாத வரலாற்றின் எடுத்துக்காட்டான தியாக தீபம்!


சமூகநீதி என்ற இட ஒதுக்கீடு கொள்கையில் தந்தை பெரியாரின் உற்ற தோழனாகவே பிரச்சாரக் களத்தில் நின்றவர்; வென்றவர்!


அவரது பிறந்த நாள் இன்று!


அவர் விரும்பிய சமூகநீதிக் கொடியை நாடெங்கும் தலைதாழாது பறக்கவிட்டு, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் புதிய சமூகம் படைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ் அஞ்சலி!


வாழ்க வ.உ.சி.!


வருக அவர் காண விரும்பிய சமூகநீதிச் சமுதாயம்!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


5.9.2020


No comments:

Post a Comment