தமிழக ஜனதா தள பொதுச் செயலாளர் அருமை நண்பர் மதுரை ஜான்மோசஸ் (வயது 71) அவர்கள் கரோனா தொற்று காரணமாக இன்று (15.9.2020) அதிகாலை மதுரை மருத்துவமனையில் காலமானார் என்பது மிகவும் வேதனையும், துயரமும் தரும் செய்தியாகும்.
அவர் முற்போக்காளர், விடுதலையின் வாசகர் - நம்மிடம் எப்போதும் மிகுந்த அன்பும், பாசமும் பொழிந்தவர். அவரது பிரிவால் வாடும் அவரது வாழ்விணையர் மேரி ஆவார்.
ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். மூன்று மகன்கள் உள்ளனர்.
அனைவரது அன்பிற்கும் பாத்திரமான பொதுத் தொண்டறச் செம்மல்.
அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும். அவருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2020
No comments:
Post a Comment