மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 4, 2020

மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

விரும்பாதவர்கள் இரண்டரை லட்சத்துக்கும் அதிகம் : பா.ஜ.க. அதிர்ச்சி!


புதுடில்லி,செப்.4 மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்கிற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே உரையாடுவார். அப்போது பல விஷயங்கள் பற்றி அவர் பேசுவார். இந்நிலையில் கடந்த 30.8.2020 அன்று  அவர் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தமிழ கத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தில் தயாரிக்கப்படும் தலை யாட்டி பொம்மைகள் குறித் தும், ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் பேசினார்.


இந்த உரையாடலை பாஜக தனது அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்திலும் பதிவேற் றியது. அந்த பக்கத்தை 30 லட்சம் பேர் வரை பின் தொடர்கிறார்கள். இருந்த போதிலும் பிரதமர் மோடி யின் உரையை ஏராளமா னோர் விரும்பவில்லை (டிஸ் லைக்) என பதிவு செய்துள் ளனர். அதை தொடர்ந்து ட்விட்டரில் #StudentsDislikePMModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்ட் ஆகி வரு கிறது. மொத்தமாக 31 நிமி டங்கள் ஓடும் இந்த காணொ லியை 28,000 பேர் விரும்பியதாக (லைக்) பதிவு செய்த நிலையில், இரண்டு லட்சத்து அய்ம்பதாயிரத் துக்கும் அதிகமானோர் விரும்பவில்லை (டிஸ்லைக்) என்று பதிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment