இல்லாத இந்துமதத்தின் ஜாதி ஆணவ வெறித் தாண்டவம்! குடும்பமே முள்வேலியால் முடக்கப்பட்ட கொடுமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

இல்லாத இந்துமதத்தின் ஜாதி ஆணவ வெறித் தாண்டவம்! குடும்பமே முள்வேலியால் முடக்கப்பட்ட கொடுமை!


தருமபுரி, செப். 11- தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சிடுவம்பட்டி, தொன்ன குட்டஅல்லி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப் பைச் சேர்ந்த குடும்பத்தினர் ஜாதி ஆணவ அடக்குமுறைகளால்  தொடர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள் (அருந்ததியினர்) நிலத்தை விலைகொடுத்து வாங்கியபோதே, நிலத்துக்கு செல்வதற்கு பாதை பயன் படுத்தும் உரிமை உள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு முதல் ஜாதி ரீதி யிலான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறிய பிரச்சி னைகளில்கூட ஜாதி ஆணவத்துடன் அடக்குமுறைப் போக்கு இருந்து வந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண் டில் ஊர்ப்பஞ்சாயத்து கூடி, ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் பிற ஜாதியினரின் காலில் விழவைக்கப்பட்ட அவமரியா தையால், லட்சுமியின்  கணவர் பழனி இறந்தே போனார். அதன்பின்னரும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அக் குடும்பத்தினருக்கு ஜாதி ஆணவ அச் சுறுத்தல் தொடர்ந்து கொண்டுள்ளது.


தங்கள் நிலத்திலிருந்து பக்கத்து நிலம் வழியே செல்ல முடியாமல் முள்வேலி அமைத்து தடை போடப் பட்டுள்ளது.


பென்னாகரம் வட்டாட்சியர் இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும் முள் வேலி அகற்றப் படாமல் உள்ளது.


Òதங்களின் நிலத்தைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கப்பட்ட போது, டிராக்டர்,லாரி செல்வதற் கான வழி விடப்படும் என்று கூறினார்கள். காலையில் எழுந்து பார்த்தபோது முற்றிலும் இரும்பு முள்வேலிக்குள் நாங்கள் முடக்கப் பட்டுவிட்டோம் என்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வேலியை விட்டு மற்றவர்களின் நிலம்வழியே செல்லக்கூடாது என்ற அச்சுறுத்தல் உள்ளது.


முள்வேலிக்குள் சிக்கிக் கொண்டு உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எங்கள் குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை முள் வேலிக்கு வெளியிலிருந்து எங்களின் உறவினர்கள் அளித்துவருகின்றனர்ÕÕ என்று வேதனையுடன் பழனி மகன் அர்ஜூனன் கூறுகிறார்.


முள்வேலி அமைத்து முடக்கப் பட்ட ஜாதிய ஆணவக் கொடுமை கள் குறித்து  பழனி என்பவரது மனைவி லட்சுமி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.


No comments:

Post a Comment