பூர்வீகச் சொத்தில் மகளிர்க்குப் பங்கு உண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

பூர்வீகச் சொத்தில் மகளிர்க்குப் பங்கு உண்டு


டாக்கா, செப். 6- பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இந்தியப் பெண்களின் சொத் துரிமையை உறுதி செய் திருக்கிறது. தற்போது வங்கதேசத்தில் வழங் கப்பட்டிருக்கும் தீர்ப்பு அங்கிருக் கும் பெண்களுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்கிறது.


கணவனை இழந்த இந்துப் பெண்களுக்குக் கணவனின் வீட் டில் மட்டுமே உரிமை என்றிருந்த நிலையை மாற்றியிருக்கிறது செப் டம்பர் 2 அன்று வங்கதேச உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. கணவனின் சொத்தில் வீட்டு நிலம், விவசாய நிலம் என எந்தப் பாகு பாடும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில் கண வனை இழந்த இந்துப் பெண்களுக்குக் கணவனின் எல்லா சொத்துகளிலும் உரிமை இருக்கிறது. தேவைப்பட்டால் அதைச் சட்டப்பூர்வமாக விற்கும் உரிமையும் மனைவிக்கு உண்டு எனவும் தீர்ப்பு சொல்கிறது.


No comments:

Post a Comment