மலேசியாவில் பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - நூல்கள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 21, 2020

மலேசியாவில் பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - நூல்கள் வெளியீடு


கோலாலம்பூர், செப். 21- மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் 16.9.2020 அன்று பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா அப்பர் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் கொண்டா டப்பட்டது.


இந்த விழாவின்போது நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன பெரியார் ஒரு சகாப்தம்-- ஆசிரியர் டாக்டர் கி வீரமணி,  இயற்கையின் புதல்வர் ஈ.வெ. ராமசாமி---- - பேராசிரியர் ராமசாமி அய்யங்கார்,  தமிழ்நாடு இந்து சமயங்களின் வர லாறு----- பேராசிரியர் சுப்பிரமணியம் பிள்ளை,  அறிஞர் அண்ணாவின் வர்ணாசிரமம் ஆகிய திராவிடர் கழக வெளியீடுகள் அறிமுகப்படுத் தப்பட்டு வெளியிடப்பட்டது.அனைத்து தோழர்களுக்கும் சிற் றுண்டி வழங்கப்பட்டது.


இந்த விழாவில் பெரியார் பெருந்தொண்டர் பெ.மு. அன்பு இதயன் வரவேற்புரையாற்றினார். தோட்ட நிர்வாகிகள் மன்ற(சபா) தலைவரும், பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவரு மான  மு கோவிந்தசாமி அவர்கள் நூல்களை அறிமுகப் படுத்தி வெளியிட்டார்.


பெரியார் பெருந்தொண்டர் புலவர் கு.க. இராமன் அவர்கள் பெரியார் அண்ணா பற்றிய கவிதை ஒன்றை படைத்தார். இந்த நிகழ்வில் முதுபெரும் பெரியார் தொண்டர்கள் கோஆவுடையா பெரியசாமி தமிழ் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,  பெரியார் பற்றாளர்கள் மற்றும் கழகத் தோழர் கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment