தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
தருமபுரி, செப். 4- தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாளை பட்டி தொட்டி எங் கும் சிறப்பாக கொண்டாடு வது என தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத் திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 30.-8.-2020 ஞாயிற் றுக் கிழமை மாலை 6 மணி யளவில் காணொலி வழியாக தருமபுரி மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலா ளர் சேட்டு வரவேற்புரை யாற்றினார். மாவட்ட இளை ஞரணித் தலைவர் தீ.ஏங் கல்ஸ் கடவுள் மறுப்பு கூறி னார். பொதுக்குழு உறுப்பி னர் கதிர், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் கே. ஆர். குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் கதிர்.செந்தில், மாவட்ட இளைஞரணித் தலைவர் தீ. ஏங்கல்ஸ், மாவட்ட இணைச் செயலாளர் கு.சரவணன் ஆகியோர் முன்னிலையேற்ற னர் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரை யாற்றினார்.
மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார். கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சியில் மாநில மகளி ரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில பகுத்தறிவா ளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த.மு. யாழ்திலீபன், மண்டலத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், இளைஞரணித் தலைவர் வண்டி.ஆறுமுகம், மாணவர் கழக மண்டலச் செயலாளர் மா.செல்லதுரை, மேனாள் மாவட்டச் செயலாளர் சி.காம ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள்
தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன் னிட்டு தருமபுரி நகரில் 20க் கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாக சுவர் எழுத்துப் பணியை மேற்கொண்ட மாவட்ட தலைவர் வீ.சிவாஜி மற்றும் துணை நின்ற தோழர் களுக்கு பாராட்டும் வாழ்த் துகளையும் தெரிவித்து கொள் கிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளை பட்டிதொட்டியெங் கும் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஆதரவு அமைப்பினரும் இணைந்து விழா கொண்டா டுவது.
தந்தை பெரியார் சிலை இருக்கும் இடங்களில் கழகப் பொறுப்பாளர்கள் ஒருவர் பொறுப்பேற்று சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்து, விழா கொண்டாடு வது.
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தலை மைக் கழகத்தால் வெளியி டப்பட்டிருக்கும் சுவரொட் டிகளை நகரப்பகுதிகளிலும் கிராமபகுதிகளிலும் ஒட்டு வது என முடிவு செய்யப்படு கிறது.
வாய்ப்புள்ள இடங்களில் திராவிடர் கழக கொடியேற் றத்துடன் குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்வதென முடிவு செய்யப்பட்டது. இறு தியாக இந்நிகழ்வில் மாவட்ட திராவிடர் கழக அமைப்பா ளர் கோவிந் தராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment