சுயமரியாதை வீரர் தாடி சிதம்பரம் மறைவுக்கு இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 22, 2020

சுயமரியாதை வீரர் தாடி சிதம்பரம் மறைவுக்கு இரங்கல்


லால்குடி - புள்ளம்பாடி ஒன்றியம் - பெருவளப்பூர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் தாடி சிதம்பரம் (வயது 86) நேற்று (21-9-2020) மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.


சட்ட எரிப்புப் போராட் டத்தில் 23ஆம் வயதில் ஈடுபட்டபோதே "தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வேன்" என்ற உறுதிமொழியேற்றபடியே செயலிலும் காட்டிய வீரர். இரு மகன்களும், ஒரு மகளும், வாழ் விணையரும் உள்ளனர்.


குடும்பத்தோடு இயக்க நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் பங்கு கொள்ளும் குடும்பம் இது. மகன் வீரமணி கழக இளைஞரணி துணை செயலாளராகப் பணியாற்றுபவர் ஆவார்.


அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 


 


- கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


22.9.2020 


No comments:

Post a Comment