ஏற்கக் கூடாது: சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, செப். 7- சமூக சமத்துவத்திற் கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,
தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019அய் சென்ற ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. கல்வியாளர்கள் அந்த வரைவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், அந்த வரைவுக் கொள்கையின் சாரம் மாறாமல், அப்படியே அது “தேசியக் கல்விக் கொள்கை 2020’’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு உலக வங்கி ஒப்புதல் கொடுத்துள் ளது. அதன் பிறகு, அக்கொள்கையை நடைமுறைப்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மத்திய அரசின் இக்கல்விக் கொள்கை, நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. மும்மொழி திட்டத்தைக் கட்டாயப்படுத்துகிறது. இந்தி மற் றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழி வகுக்கிறது. கல்வியை கார்ப்பரேட் மயமாக்குகிறது. குலக்கல்வி முறை யையும், ஜாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலையும் மறைமுக மாகத் திணிப்பதாக உள்ளது. இந்தி யாவை இந்து நாடாக மாற்றுவ தற்கான நோக்கத்துடன் இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அர சின் இந்த தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில், போலி மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாகக் காலாவதியான மருத்துவ முறைகளையும் திணிப்பதற்கு முயல் கிறது. இந்தக் கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியை மேலும் தனியார் மயமாக்குகிறது. கார்ப்பரேட் மய மாக்குகிறது. சமூக நீதிக்கு எதிராக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற் கும், ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது. எனவே, இந்த தேசிய கல்விக் கொள்கை 2020அய், உடனடியாக திரும்பப் பெற வேண் டும்.
இக்கல்விக் கொள்கை குறித்து ஆராயத் தமிழக அரசு குழு அமைத் திருப்பது அவசியமற்றது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் போல் உள்ளது. தமிழக அரசு இக்கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது. இக்கல்விக் கொள்கையை திரும் பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத் துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment