பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடப்படும் சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 13, 2020

பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடப்படும் சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு

சென்னை, செப். 13- அறிவா சான் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடு வதற்காக சென்னை மண்ட லக் கழகம் சார்பில் காணொ லிக் கலந்துரையாடல் நடை பெற்றது. நிகழ்வில் கழகத் துணைத்தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.



சென்னை மண்டலக் கலந்துரையாடல் 27.8.2020 வியாழக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை மண்டலத்தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் அனைவரையும் வரவேற்றார். தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மண்டலத்தில் சுவரெழுத்து எழுதுதல், சுவரொட்டி ஒட் டுதல், துண்டறிக்கைக் கொடுத் தல், கழகக் கொடியேற்றுதல் மற்றும்  தலைமை செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர் கள், செயலாளர்கள் கூட்டங் களில் எடுக்கப்பட்ட முடிவு களை செயல்படுத்துதல் ஆகி யவற்றை சிறப்பாகச் செய்தல் கூட்டப்பட்டுள்ள கலந்துரை யாடலின் நோக்கமாக மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் எடுத்துரைத் தார். பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ்,  துணைப்பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற் றினர்.  இறுதியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன் றன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஊரடங்குக் காலத்தில் திரா விடர் கழகம் வேறு எந்த அமைப்பையும்விட சிறப் பான பிரச்சாரத்தை மேற் கொண்டு வருவதையும், தந்தை பெரியாரின் தேவை இந்தியா முழுவதும் உணரப் படுவதையும் சுட்டிக்காட்டி, இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஆகவே, எந்த ஆண்டும் இல்லாத வகை யில் இந்த ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுங் கள் என்று கூறியதோடு பகுத் தறிவுப் பலகைகளில் பெரியா ரின் பொன்மொழிகளை தொடர்ந்து எழுதவேண்டும் என்பதையும் நினைவுபடுத்தினார்.



முன்னதாக பேசிய பொதுச் செயலாளர் கோவிட் - 19அய் நினைவுபடுத்தி எச்சரிக்கை யாக இருக்க வேண்டியதையும் மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார். நிகழ்வை மாநில மாணவர் கழகச் செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் காணொலிக் கூட் டத்தை ஒருங்கிணைத்தும், இணைப்புரை வழங்கினார். இறுதியில் மண்டல மகளிர ணிச் செயலாளர் ஓவியா அன்புமொழி நன்றி கூறினார்.



நிகழ்வில் சென்னை மண் டலத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர் கள், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞணி, மாணவர் கழ கம், தொழிலாளரணி தோழர் கள் இக்காணொலிக் கலந் துரையாடலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment