தடுப்பூசி மூலம் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

தடுப்பூசி மூலம் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது

உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை


ஜெனீவா,செப்.7, தடுப்பூசி மூலம் கரோனாத் தொற்றை முற்றிலும் ஒழித்து விடலாம் என்று பல்வேறு நாடுகள் நம்பியுள்ளதாகவும், ஆனால்  தற்போதைக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என உலக சுகாதார மய்யம் தெரிவித்துள்ளது.


கரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்யக் கூடும் என்றும், அதன் பிறகு செயலிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. எனவே, கரோனா நோய்த் தொற்று தடுப்பு நெறிமுறைகளை உலக நாடுகளும், மக்களும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார மய்யத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment