தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனா ரின் மாமியார் மற்றும் சகோதரி - மறைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பழனிச்சாமி அவர் களின் வாழ்விணையர் தாயம்மாள் 4.9.2020 முற்பகல் 11 மணியளவில் ஒட்டன்சத்திரத்தில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மறைவு செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மோகனா அம்மையார், கழகப்பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ் ஆகியோர் அய்யனாரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்
5.9.2020 அன்று காலை 11 மணியளவில் ஒட்டன்சத்திரம் அவ ர்களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. முன்னதாக காலை 10 மணியளவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது
தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மதுரை பி.வரதராசன், பழனி மாவட்டத் தலைவர் இரணியன், பொதுக்குழு உறுப்பினர் வீரகலா நிதி, தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் ச.சந்துரு, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், உரத்தநாடு ஒன்றிய முன்னாள் செயலாளர் அ.உத்திராபதி, திண்டுக்கல் மண்டல மாணவர் கழகச் செயலாளர் விக்ரம்செல்வா உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.
மகள்கள் கலையரசி, முத்துலெட்சுமி, மருமகன் சக்திவேல், மகன் ராஜேந்திரன், மருமகள் செல்வி, பேரன்கள் திலீபன், கவின் உள் ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். பகல் 12 மணியளவில் ஒட்டன்சத்திரம் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது, தொடர்புக்கு -9566779011
No comments:
Post a Comment