ஒற்றைப் பத்தி - மானமிகு கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

ஒற்றைப் பத்தி - மானமிகு கலைஞர்


கேள்வி: திராவிட இயக் கங்களுக்கு இன்று பெரியார் என்னவாக இருக்கிறார்?


பதில்: திராவிட இயக்கங் களுக்குத் தந்தை பெரியார் ஆதர்ச சக்தியாக விளங்கி வரு கிறார். எங்களைப் பொறுத்த வரை தந்தை பெரியார் எல் லாமாக விளங்குகிறார். திராவிட இயக்கம் என்று பெயர் அள வில் சொல்லிக் கொண்டிருக் கின்ற இயக்கங்களுக்குப் பெரியார் பெயர் அளவில் இருக்கிறார். அதாவது ஊறு காய்போல் உபயோகப்படுத் தப்படுகிறார்.


கேள்வி: திராவிட இயக்கங் களில் பெரியார் கொள்கைகள் மீது பெண்களின் பெருமளவு கவனத்தைக் கவர முடியாதது ஏன்?


பதில்: பெரியாரின் கொள் கைகளில் தொடக்கக் காலத்தில் தாலி மறுப்பு, விதவைத் திரு மணம், கடவுள் மறுப்பு, கலப்புத் திருமணம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதில் பெண் களுக்கு சற்று தயக்கம் இருந் தது. உண்மைதான். ஆனால், இப்போதெல்லாம் இந்தக் கொள்கைகளில் ஆண்களை விட பெண்கள்தான் மிகத் தீவிரமாக ஆதரித்து வரு கிறார்கள் என்பதை நாங்கள் கண்டு வருகிறோம்.


‘‘புதிய புத்தகம் பேசுது'' இதழுக்காக கலைஞர் பேட்டி, ஜனவரி 2008


முத்தமிழ் அறிஞர் மான மிகு கலைஞர் சொன்னது - எந்த அளவுக்கு உண்மை என் பதை நாடு பார்த்துக் கொண்டு தான் உள்ளது.


தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர் மானம்கூட அந்த அடிப்படை யில்தான் அமைந்துள்ளது.


பெரியார் - அண்ணா - கலைஞர் தடம்பற்றி வளர்ந்த கட்சியின் மூத்த நிர்வாகி துரைமுருகன் என்று பாராட்டி யிருப்பது - இந்தத் தலைவர் களின் கருத்துவழி கால் பதிப் பது தி.மு.க. என்று சுட்டிக் காட்டுவதன் பிரதிபலிப்பே!


அதேபோல, தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மானமிகு துரைமுருகன் அவர்கள் ஆற்றிய ஏற்புரையில் இதனை முக்கியமாகவும், அழுத்தமாகவும் பேசினார்.


நடந்து கொண்டிருக்கும் சித்தாந்த போராட்டத்தில், கலாச்சாரப் போராட்டத்தில் தந்தை பெரி யாரின் - திராவிடர் இயக்கத்தின் பங்கும், இடமும் மிகவும் முக்கியமானது என் பதைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறியிருக்கிறார்.


இளைஞர்கள் பெரியார் பாதையில் பயணிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.


இன்றைக்கு வடபுலத்தில் கூட, சமூகநீதித் தடத்திலும், மதச்சார்பின்மைக் களத்திலும் அவ்வப்போது போராடும் மாணவர்களின் கரங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்கள்தான் பதாகைகளாகப் பட்டொளி வீசுகின்றன.


ஒரு முக்கியமான கால கட்டத்தில் தி.மு.க. புதிய பொறுப்பாளர்களை பொருத்த மாக ஒருமனதாக சரியாகத் தேர்வு செய்திருப்பது கலாச்சார எதிரிகளின் கண்களைக் குத் தத்தான் செய்யும் - அவற்றை எல்லாம் எதிர்கொள்வோம்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment