விருத்தாசலம், செப், 12- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 9ஆவது தொடர்சொற்பொழிவாக பெரியாருக்குப் பின் தமிழ்நாடு எனும் தலைப்பில் செப்டம்பர் 6 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.
இதில், திராவிடர் கழக தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் தீ.ஏங் கல்ஸ் வரவேற்புரையாற்றினார். கட லூர் மண்டல இளைஞரணிச் செய லாளர் நா.பஞ்சமூர்த்தி தலைமை வகித் தார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு தே.காமராஜ், பொன்னமராவதி வெ. ஆசைத்தம்பி, தஞ்சை இரா.வெற்றிக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் இணைப்புரை வழங்கினார்.
நிறைவாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா ளர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற் றினார்.
அப்போது, தந்தை பெரியாருக்கு பின்னும் அவரது தத்துவங்கள் தமிழ் நாட்டை வழிநடத்துகிறது. தந்தை பெரியார் பற்றி அவரது தொண்டர்கள் ஆகிய நாம் சிந்திப்பதைவிட எதிரி களான ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் அதிகம் அதிகம் சிந்தித்து வருகின்றனர் எதிரிகளை, துரோகிகளை பெரியார் தத்துவம் என்பது தூங்கவிடாமல் செய் கிறது. பெரியார் தத்துவங்கள் தமிழ்நாட் டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் வழி காட்டியாக அமையும் என பேசினார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் ராஜா, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், கோவை மண்டல இளை ஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், திருச்சி மண்டல இளை ஞரணி செயலாளர் அன்புராஜா, மதுரை மண்டல இளைஞரணிச் செய லாளர் அழகர், காஞ்சிபுரம் மண்டல இளைஞரணி செயலாளர் இளந்திரை யன், தென்சென்னை மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் மணித்துரை, சோழங்கநல்லூர் மாவட்ட இளைஞ ரணித் தலைவர் நித்தியானந்தம், ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபராஜ் செல்லதுரை, மாநில துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி மாநில அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத் தாசலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ராமராஜ், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர இளைஞரணி அமைப் பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ரமாபிரபாஜோசப், மத்தூர் அரங்க.ரவி, கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ், திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செய லாளர் ஆறுமுகம், நீடாமங்கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி. மணிவேல், அல்லூர் பாலு, ராஜமாணிக் கம், துரைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக அரியலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment