இதுதானா டிஜிட்டல் இந்தியா?
சென்னை,செப்.12, உதவித் தொகை பெறுவதற்காக வங்கிக் குச் சென்ற மூதாட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள அம்மையார்குப்பத்தை சேர்ந்த முனுசாமியின் மனைவி மோகனம்மாள் (வயது 70). திருத்தணி கசவராஜ்பேட்டை யில் வசித்து வருகிறார். இவர், நேற்று அம்மையார்குப்பம் இந் தியன் வங்கிக்கு சென்று அவரது கணக்கிலிருந்து முதியோர் உதவி தொகை எடுக்க வரிசையில் காத்திருந்தார்.
அப்போது, வாடிக்கையா ளர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாலும், வங்கி மாடி மேல் தளத்தில் இருப்பதால் குறுகிய படிகள் வழியாக சென்று வர வாடிக்கையாளர்களிடையே நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அப்போது, படிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மூதாட்டி நெரிசலில் சிக்கி தவறி படியில் விழுந்தார். அதில், படுகாய மடைந்த அவரை மீட்டு திருத் தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக, வாடிக்கையாளர்கள் கூறுகை யில், ‘25 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள வங்கியில், போதிய ஊழி யர்கள் இன்றி குறுகிய இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே. வேறு இடத்திற்கு வங்கியை மாற்றம் செய்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment