இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

இராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி


புதுடில்லி, செப். 20- இந்திய இராணுவத்தில் ஆண்களைப் போல பெண் அதிகாரிகளுக் கும் நிரந்தரப் பணி, பதவி உயர்வு போன்றவற்றை வழங்க வேண்டும் என உச்சநீதிமன் றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்திருந்தது. அதன்படி பெண் அதிகாரி களுக்கும் நிரந்தரப் பணி வழங்குவதற்கான முறையான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு வெளியிட்டது.


இதைத்தொடர்ந்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந் தரப் பணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந் துள்ளது. இதற்காக பெண் வீரர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் ராணுவ தலைமையகத்தில் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இதில் மூத்த பொது அதிகாரி மற்றும் பிரிகேடியர் தகுதியில் உள்ள பெண் அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு செயல்பட்டு வருகிறது.


இந்த தேர்வு நடவடிக் கைகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த தேர்வு நட வடிக்கைகளை பெண் அதி காரிகள் பார்வையாளர்களாக நேரில் கண்டறியலாம் என இராணுவ செய்தி தொடர் பாளர் அமன் ஆனந்த் தெரிவித்தார்.


இதில் தேர்வாகும் பெண் அதிகாரிகள் நிரந்தரப் பணியை பெற முடியும். எனினும் அதற்கான உடல் தகுதி தேர்வில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என வும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment