இசுலாமிய இளைஞர் கை துண்டிப்பு பா.ஜ.க. ஆளும் அரியானாவில் தலை விரித்தாடும் இந்துத்துவா மத வெறி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

இசுலாமிய இளைஞர் கை துண்டிப்பு பா.ஜ.க. ஆளும் அரியானாவில் தலை விரித்தாடும் இந்துத்துவா மத வெறி!


சண்டிகர்,செப்.20, உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே நானாட்டா இக்லக் சல்மானி (வயது 28) என்பவர் அரியானா மாநிலம் பானிப்பட்டு நகருக்கு வேலை தேடி கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று  சென்றார்.


பானிப்பட்டு அருகே கிருஷ் ணபுரா என்கிற பகுதிக்கு அவர் சென்ற போது இருட்டிவிட்டது. அவருக்கு தங்குவதற்கு அங்கே யாரும் தெரிந்தவர் இல்லை. எனவே, பூங்கா பகுதியிலேயே அன்றிரவுப் பொழுதைக் கழிக்க முடிவுசெய்து, உறங்கச் சென்ற போது, அவரை இருவர் தடுத்து அவர் பெயரைக் கேட்ட மாத்தி ரத்திலேயே சரமாரி யாகத் தாக்கத் தொடங்கினர். பூங்கா பகுதியி லேயே மயக்கமடைந்தார். பின்னர் தாகம் எடுத்ததால் தண்ணீர் கேட்டு குடிப்பதற்காக  பூங்கா அருகிலுள்ள ஒரு வீட்டுக்குச் சென்றபோது, கதவு திறந்து இருந்தது. ஆனால், அந்த வீட்டில் அவரைத் தாக்கிய இருவரும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  அவ்விருவருடன் இரு பெண்கள் உள்பட ஆறுபேர் சேர்ந்து அவரை வீட்டுக்குள் இழுத்துச்சென்று திரும்பவும் சரமாரியாக தாக்கி னார்கள்.


தடியால் தாக்கியதுடன், கல் லில் அவர் தலையை மோதியுள் ளார்கள். அவருக்கு உயிருக்குப் போராடும் நிலையில், தன்னை விட்டுவிடுமாறு கதறியுள்ளார். எவர் காதிலும் அவர் கதறல் விழவில்லை.


இசுலாமிய அடையாளமாக பிஸ்மில்லா என்பதைக் குறிக்கின்ற 786 எண் அவர்  வலது கையில் (டாட்டூ) சித்திரம் இருப்பதைக் கண்ட அவர்கள் இவன் உடலி லிருந்து சித்திரத்தை அகற்றிவிட வேண்டியதுதான் என்று கூறி ரம்பத்தால் கையை அறுத்து துண் டித்துவிட்டனர். இரத்த வெள்ளத் தில் மயங்கிக்கிடந்த  இக்லக் இறந்து விட்டதாகக் கருதி கிருஷ் ணபுரா ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டார்கள்.


மறுநாள் காலை மயக்கம் தெளிந்த இக்லக் அந்த வழியே சென்றவர்களிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண் டிருந்தார். மேலும், தன் குடும் பத்தினருக்கும் தகவல் சொன்னார்.


அரியானா மாநிலத்தில் பானிப் பட் அருகே உள்ள தானா சந்தினி பாக் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜி.ஆர்.பி. காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பல்வான் மருத்துவ மனையில் முதற் கட்ட விசாரணை செய்தார்.


இக்லக்கின் சகோதரர் இக்ரம் கூறுகையில், என்னுடைய சகோத ருக்கு 15 வயதிருக்கும் போது அவர் வலக்கையில் 786 எண் சித்திரம் பதியப்பட்டது.  என்னுடைய சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும். அரியானா மாநில அரசின் அழுத்தம் காரணமாகவே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்காமல் உள்ளனர் என்றார்.


சமூக ஊடகங்களில்  இக்லக் படம் பலராலும் பகிரப்பட்டு அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இக்லக் கையில் இசுலாமிய அடையாளம் இருந்ததால் கை துண்டிக்கப் பட்டார் என்று குறிப்பிட்டு அவர் படம் சமூக ஊடகங்களில் வைர லாகி வருகிறது.


No comments:

Post a Comment