தாராபுரம்,செப்.16- தந்தை பெரியாரின் 142ஆ-வது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவ தென தாராபுரம் நகர, ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம் கடந்த 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தாராபுரம் நகர, ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தாராபுரம் பெரியார் திடலில் துவங்கி நடைபெற்றது.
நிகழ்வில் தாராபுரம் கழக மாவட்ட செய லாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார்.தாராபுரம் நகர கழக செயலாளர் ப.மணி அனைவரையும் வரவேற்றார். தாராபுரம் ஒன் றிய கழக தலைவர் நாத்திக சிதம்பரம்,செயலாளர் முருகன்,நகர கழக தலைவர் மு.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்:
1) தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளான 17.09.2020 அன்று முதற்கட்டமாக காலை 9 மணியளவில் தாராபுரம் பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது,அதைத் தொடர்ந்து காமராஜபுரம்,வடதாரை,நடுதாரை,அண்ணா சிலை, வட்டாட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தம்,வீராட்சிமங்கலம் ஆகிய இடங்களில் கழகக் கொடியேற்றுவது,மதியம் 12 மணியளவில் ஊதியூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என தந்தை பெரியாரின் பிறந்தநாளை எழுச்சி விழாவாக கொண் டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
2) மத்திய பாஜக அரசால் வெளியிடப் பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை என்கிற நவீன குலக்கல்வி திட்ட த்தின் அபாயத்தை வெகுமக்களிடம் எடுத்துக்கூறிடும் வகையில் புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? என்கிற தலைப்பில் கழக தலைமை நிலையத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ள துண்டறிக்கைகளை தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாராபுரம் கழக மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளி லும் பொதுமக்கள் மத்தியில் பெருவாரியாக விநியோகிப்பதெனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் வழக்குரைஞர் ராமபட்டினம் முருகேசு, தாராபுரம் நகர பக தலைவர் சு.திரா விடன், பகுத்தறிவாளர் பொன்.பாலு,கழக மாணவர் கழகத்தைச் சார்ந்த இளஞ்செழியன், சந்தோஷ் பிரியன் உள்ளிட்டவர்கள் பங்கேற் றனர்.
கூட்டத்தின் நிறைவாக தாராபுரம் நகர பக அமைப்பாளர் மதி.பெரியார் நேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment