இந்திய செய்தி பகிர்மானத் தளங்களில் முக்கியமான - அரசுக்குச் சொந்தமான பி.டி.அய்., டி.என்.என். மற்றும் ஏ.எப். அய். ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றுமில்லாத 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை மிகவும் பிரமாண்டமாகக் காட்டியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்றுமே பார்ப்பனர்கள் மற்றும் பனி யாக்களின் ஆளுமை அதிகம் கொண்டனவாகும்.
இதில் பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி மற்றும் தற்போது விவசாய விரோத மசோதாக்களுக்கு மக்களிடையே பெருத்த ஆதரவு இருப்பது போன்ற செய்திகளை உருவாக்குவதிலும் இவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.
இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு, பண மதிப்பிழப்பின்போது ஒரு நபர் தான் சிறு வணிகர் பண மதிப்பிழப்பினால் எனக்கு மிகப்பெரும் நன்மை ஏற்பட்டது, என்று கூறி யாரோ எழுதிக் கொடுத்த செய்தியை வாசித்து பிரபலமானார். அப்போது அவர் ஒரு சிறு வணிக நிறுவனத்தின் பின்புலத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த செய்தியை ஏ.எப்.அய். வெளியிட்டது,
தற்போது விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பூகம்பத்தை கிளப்பிக்கொண்டு இருக்கையில் விவசாயி ஒருவர் இந்த மசோதாவினால் எனக்கு ஏற்படப்போகும் நன்மைகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு இருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி அச்சு ஊடகங்களில் வெளியானது, விவசாயி வேடம் போட்டு பேட்டி கொடுத்த நபர் 2016 ஆம் ஆண்டு பண மதிப் பிழப்பின் போது சிறு வணிகராக வேடம் போட்டு வந்த நபர் என்பதை சமூகவலைதளங்களில் தேடிப்பிடித்து வெளியிட் டுள்ளனர்.
மக்களுக்கு நடுநிலையாக செயல்படவேண்டிய ஊடகங்கள் இப்படி படுமோசமான நடவடிக்கையில் இறங்கி ஆளும் பாஜக அரசின் ஊடகப்பிரிவாகவே செயல்பட்டு வருகின்றன என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு
No comments:
Post a Comment