இதுதான் கடவுளின் சக்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

இதுதான் கடவுளின் சக்தியா

இதுதான் கடவுளின் சக்தியா?


தீப்பற்றி எரிந்து கரிக்கட்டையானது  கோவில் தேர்!



அமராவதி, செப்.7, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் சிறீலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


5.9.2020 அன்று நள்ளிரவு திடீரென இந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. கோவிலுக்கு சொந்தமான வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர் எரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள் ளனர். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாகவும், தீ விபத் துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். தேருக்கு விசமிகள் யாராவது தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.


No comments:

Post a Comment