உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா

உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?



கொரோனா வைரஸ் ஒரு பெருந் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்தி கள் பரவுவது குறைந்த பாடில்லை.


அந்த வகையில், அண்மைக்காலமாக அதிகள வில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம்.


கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்


உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறா னது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாய கரமானவை அல்ல.


கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங் கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென் றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமா னியை கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.


இந்த வெப்பமானிகள் உடலின் மேற் பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிடுவதன் மூலம் ஒரு நபரின் வெப்ப நிலையை பதிவு செய்கின்றன.


அதிக உடல் வெப்பநிலை என்பது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக் கான அறிகுறியாக கருதப்படுகிறது.


உடலில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமானி பதிவு செய்கிறது. அனைத்து பொருட்களின் மேற்பரப்பு களும் இந்த வகை கதிர்வீச்சை வெளி யிடுகின்றன. எனவே, இந்த கருவியிலி ருந்து எவ்வித கதிரும் மனிதர்களை நோக்கி செலுத்தப் படுவதில்லை.


இந்த நிலையில், இந்த செயல்முறை அபாயகரமானது என்ற போலியான தகவலை கூறும் காணொளி ஒன்றை யூடி யூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட் டோர் பார்த்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத செவிலியர் ஒருவரின் கவ லைகளை அந்த காணொலியில் விளக்கும் நபர், வெப்பமானிகளால் பினி யல் சுரப்பி பாதிக்கப் படுவதாக கூறுகிறார்.


மெலடோனின் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தும் இந்த சுரப்பி மூளையின் ஆழ்ந்த உட்பகுதியில் உள்ளது. ஆனால், உண்மையில் வெப்பமானிகளால் இந்த சுரப் பிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவ தில்லை.


“இது உங்களது கதிர்வீச்சை கணக்கிடு வ தற்கான பாது காப்பான வழி” என்று கூறுகிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத் தின் மருத்துவப் பேராசிரியரான ஸ்டா ஃபோர்ட் லைட்மேன்.


No comments:

Post a Comment