ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • ஜி.எஸ்.டி. நிதி பங்கீட்டில் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மோடி அரசு அநீதி இழைத்து வருவதை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அம்பலப்படுத்த வேண்டும். இதற்காக ஏனைய மாநிலக் கட்சிகளோடு இணைந்து போராட வேண்டும் என தெலுங்கான மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

  • இந்திய வர்த்தக அமைப்பின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், ஆகஸ்டு 2020இல் மட்டும் 41 சதவீத நிறுவனங்களின் விற்பனை சென்ற ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட பாதியாக, 50 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. காரணம் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என தெரிவித்து உள்ளது. இவர்களின் கருத்தையும் இதையொட்டிய பொருளா தார அறிஞர்களின் கருத்தையும் கேட்டு, மோடி அரசு அடித் தட்டு மக்களிடம் பணம் சென்றடைய ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை உடன் செய்யவில்லை என்றால், மக்கள் அரசிடம் கனிவாக இருக்க வாய்ப்பில்லை என தலையங்கத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டை மோடி அரசு 50 சதவீதம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் கன்னியாகுமரியிலிருந்து டில்லி வரை நடைப்பயணம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • தமிழ் நாட்டில் பிரதமர் கிஷான் நிதித்திட்டத்தில் கோடிக் கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதை சி.பி.அய். விசாரணை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தி இந்து:



  • அமெரிக்க நாட்டின் பாரா சட்டத்தின் கீழ், பா.ஜ.க.வின் ஓவர்சீஸ் நண்பர்கள் அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் தங்களுக்கு உள்ள தொடர் பினை வெளிப்படையாக தெரிவித்தாக வேண்டும்.

  • கரோனா தொற்று காரணமாக, சென்ற வாரம் நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில், 26 சதவீத மாணவர்கள், தேர்வில் கலந்து கொள்ளவில்லை. 8.58 லட்சம் மாணவர்களுக்குப் பதிலாக 6.35 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


- குடந்தை கருணா


11.9.2020


No comments:

Post a Comment