தமிழக அரசு பணி வயது உச்சவரம்பு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

தமிழக அரசு பணி வயது உச்சவரம்பு அதிகரிப்பு

சென்னை, அக்.10 தமிழக அரசு துறையில், நேரடி யாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்சவரம்பு, 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில், சில பணிகளுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10 ஆம் வகுப்புக்கு கூடுதலான கல்வி இருக்கக் கூடாது. அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்சவரம்பு, 30 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment