முதலீட்டை இருமடங்காக்க தைவான் திட்டம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு  - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

முதலீட்டை இருமடங்காக்க தைவான் திட்டம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு 



சென்னை, அக். 11- தமிழகத்தில் தனது முதலீட்டை இருமடங் காக்க தைவான் நாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று, தைபே பொருளாதார மற்றும் கலாச் சார மய்யம் இயக்குநர் பென் வாங் தெரிவித்தார்.  


சென்னையில் உள்ள தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மய்யம்  தைவான் நாட்டின் தேசிய தினத்தை  லீலா பேளஸ் அரங்கில் கொண்டாடியது. "பொருளாதாரத்தை மீட்க வும் வளரவும்: தைவான் உதவ முடியும்"என்ற கருத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியி ன் நோக்கம் புதிய தென் எல்லைக் கொள் கையை ஊக்குவிப்பதும், மேலும் தைவானிய நிறுவனங் களை தென்னிந்தியாவில் முத லீடு செய்ய ஊக்குவிப்பதும், COVID-19க்கு பிந்தைய காலத் தில் விநியோகச் சங்கிலியை மறுசீரமைக்கவும் ஆகும்.


நிகழ்ச்சியில் பேசிய தமி ழக தொழில் துறை செயலா ளர் முருகானந்தம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு காலத்திலும் நிறைய முதலீட்டை ஈர்த்து 41 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. முதலீட்டை பெருக்கவும், முதலீட்டை ஈர்க்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க பல திட்டங்கள் தமிழகத்தில் செயல் படுத்தபடுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment