மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள்ளுவானா? அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பானா? அல்லது இருக்கமாட்டானா? அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா? இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறு வளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா? என்று பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment