மன்னை ஆர்.பி.சாரங்கன் 25ஆம் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 12, 2020

மன்னை ஆர்.பி.சாரங்கன் 25ஆம் நினைவு நாள்

மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 29 விடுதலை சந்தா ரூ.27,900 வழங்கினர்


தஞ்சை, அக். 12- மேனாள் மேலத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மறைந்த மன்னை ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் காணொலி வாயிலாக 10.10.2020 மாலை 6.30 மணியளவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நினைவுரை யாற்றினார்.


நிகழ்வில் "மன்னை ஆர்.பி.சாரங்கன் நினை வாகவும், தந்தை பெரியார் பிறந்த நாள் பரிசாகவும், தமிழர் தலைவர் அவர்களிடம் 2 ஆண்டு சந்தா, 27 ஆறு மாத சந்தா என 29 ‘விடுதலை' சந்தாக்களுக்கான தொகை ரூ.27,900 மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழங்கப்படுகிறது" என அறிவித்து மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் வழங்கினார்கள்.


கலந்துகொண்டோர்


இக்காணொலி நிகழ்வில் மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


கழகக் காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசு, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட செயலாளர் கோ. கணேசன் ஆகியோர் முன்னிலையேற்று நினை வுரையாற்றினார்கள்.


நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சோம.செந்தமிழ்செல்வன் (திமுக), தி.மு.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர்  மன்னை சோழராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தலையாமங்கலம் பாலு (திமுக) ஆகியோர் நினைவுரை யாற்றினார்கள்.


கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் இணைப்புரையாற்றி நிகழ்வை ஒருங் கிணைத்து நடத்தினார். மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஜும் மூலம் இணைத்தார்.


முன்னதாக மன்னை ஒன்றிய செயலாளர் செல்வராசு அவர்களின் பெயர்த்தி வர்சினி தந்தை பெரியாரைப் பற்றி பேச்சுப் போட்டியில் பங்கேற்று பேசிய உரையை வழங்கினார். இறுதியாக மன்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன் நன்றி கூறினார்.


நிகழ்வில் மன்னார்குடி சட்டமன்ற உறுப் பினர் டி.ஆர்.பி.ராஜா, மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, கழகப் பொருளாளர் வீ.கும ரேசன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேல், மாநில கிராம பிரச்சார குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பேச்சாளர்கள் இரா.பெரியார் செல்வன், இராம.அன்பழகன், சு.சிங்காரவேல், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், காப் பாளர் வெ.ஜெயராமன், தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேஷ், மன்னை மாவட்ட துணைத் தலைவர் சுந்திரமணி, மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், பொதுக் குழு உறுப்பினர் சிவஞானம், நீடாமங்கலம் நகரத் தலைவர் அமிர்தராஜ், செயலாளர் இரா ஜேந்திரன், மாவட்ட ப.க. தலைவர் வை.கவுதமன், மாவட்ட ப.க. செயலாளர் உகல் யாணசுந்தரம், ஆசிரியர் கோபால், மன்னை சித்து, மன்னை கோவி.அழகிரி, புதுச்சேரி தலைவர் சிவ.வீரமணி, தங்க.பூவானந்தம், வடசேரி ஞான சிகாமணி, தலையாமங்கலம் துரைராசு, பெரியார் நகர் உத்திராபதி, ஆசிரி யர் தங்க.வீரமணி, மன்னை மணிகண்டன், இராயபுரம் பரமசிவம், சோம.வேலாயுதம், நெய்வேலி வெ.ஞானசேகரன், சொக்கனாவூர் ரமேஷ், அமைப்பு செயலாளர்கள் ஊமை ஜெய ராமன், ஈரோடு சண்முகம், சடையார்கோவில் நாராயணசாமி, மேலவாசல் தமிழ்செல்வன், நீலன் அசோகன், நெல்லுப்பட்டு அ.இராமலிங் கம், திருவாரூர் கோ.செந்தமிழ்ச்செல்வி, இரா.சிவக்குமார், அரு.நல்லத்தம்பி, சோம.நீலகண் டன், சிற்பி சேகர், குடந்தை கவுதமன், வீர. கோவிந்தராசு, அண்ணா சரவணன், பாவலர் பொன்னரசு கைலை.ஊமத்துரை உள்ளிட்ட 200 நபர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment