நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் பிரச்சார கருத்தரங்குகள் நடத்த குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம்  முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் பிரச்சார கருத்தரங்குகள் நடத்த குமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம்  முடிவு


நாகர்கோவில், அக். 26- நாகர்கோ வில் ஒழுகினசேரி  பெரியார்மய் யத்தில் நடந்த  திராவிட மாணவர் சந்திப்பு மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத் திற்கு மாவட்ட தலை வர் எம்.எம்  சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 


கழக மாவட்ட செயலாளர் கோ.  வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.  கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் வே. செல்வம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  மாநில திராவிடர்  மாணவர்  கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலை வர் உ. சிவதாணு, கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெரு மாள், மாவட்ட அமைப்பாளர் ஞா. பிரான் சிஸ், தொழிலாளர் அணி செயலாளர் ச. ச கருணாநிதி  ஒன்றிய செயலாளர் குமாரதாஸ்,  மாவட்ட  இளைஞர் அணித் தலைவர்  இராஜேஸ், செயலா ளர் அலெக்சாண்டர் ஆகியோர் கருத் துரை ஆற்றினர்.  நாகர் கோவில் பிரித்தீஸ்ராசா, தேரூர் இசை கண் ணன், இசை செல்வி  ஆகியோர் மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.  ப.க. செயலாளர் பெரியார் தாசு  இல.செந்தமிழ், மிலன்   மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மு .சேகர் நன்றி கூறினார்.


இரங்கல்  தீர்மானம்


தூத்துக்குடி மாவட்ட கழக தலைவர் தி.ப பெரியாரடியான், மதுரை மண்டல கழக தலைவர் பவுன் ராசா, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் குமரி மாவட்டத் தோழர்கள் திங்கள் நகர் பெ.சுப் பிரமணியம், தோவாளை சுப்பிர மணியம், மேக்காமண்டபம் டேவிட் லாசரஸ், இடலாக்குடி தாமஸ், வடசேரி பி.எஸ். ராஜன், மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தந்தையார் தா.கோவில் பிள்ளை ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங் கல்களை தெரிவித்துக் கொள்கிறது.


நீட் தேர்வை, புதிய கல்விக் கொள் கையை ரத்துசெய்ய வலி யுறுத்தி தொடர்பிரச்சாரங்களை நடத்துவது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்   அவர்கள் பிறந்த நாளை டிசம்பர் 2  அன்று  வெகு சிறப்பாக பிரச்சாரப் பெரு விழாவாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது.


No comments:

Post a Comment