திராவிடர் கழகக் கொடி ஏற்றப்பட்டது
வெள்ளமடம், அக். 12-- கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வெள்ளமடம் கிறிஸ்துநகரில் உள்ள திரா விடர் கழக மாவட்ட செயலா ளர் கோ..வெற்றி வேந்தன் இல்லத்தில் தநதை பெரியார் பிறந்த நாள் விழா நடை பெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந் தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் இரா.இரா ஜேஷ், செயலாளர் எஸ். அலெக் சாண்டர் ஒன்றிய கழக தலைவர் குமாரதாஸ், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.. கழக இளைஞர் அணி பொறுப்பாளர் தமிழரசன் திராவிடர் கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். மாந கர கழக துணைத் தலைவர் கவிஞர் அய்.செய்க் முகமது, இளைஞர் அணி அமைப்பா ளர் ம.மகேஷ் திராவிடர் கழ கத்தோழர்கள் இசைக் கண் ணன், ஷெர்பின், டேனி, பிரதீஷ்ராஜா மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment