உலக வங்கி எச்சரிக்கை
புதுடில்லி, அக். 9- கரோனா தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செங்குத்தான தாக்கத்தை சீர மைக்க இந்தியா முக்கியமான சீர்திருத் தங்களைத் தொடர வேண்டும் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பிராந்தியமாக தெற்காசியா கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஆண்டு தோறும் 6 சதவீதமாக முதலிடம் பிடித் தது, 2020 ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக அது சுருங்கி மிக மோசமான மந்தநிலை சரிவு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடான இந்திய பொருளாதாரம் 2021 மார்ச்சில் தொடங்கிய நிதியாண்டில் 9.6 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி நிதியாண்டில் 5.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி இந்தியாவில் 2021 ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் கூர்மையான சரிவு ஏற்படும் என கணித்து உள்ளது. 9.6 சதவீதம் சுருக்கத்தை கணித்துள்ளது, இது ஜூன் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 3.2%அய் விட செங்குத்தானது ஆகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலவீனமான செயல்பாடு இந்திய இறக் குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டையும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
No comments:
Post a Comment