காவிகளால் சூழப்பட்டதா காவல்துறை?
ஆதித்தமிழர் பேரவை கண்டனம்
சென்னை, அக். 11- ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,
கடந்த 17-ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளன்று கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவலர்களான ரங்கராஜ்,ரஞ்சித்,அசோக் ஆகிய மூன்று காவலர்களும் சீருடை அணியாத பட்சத்தில் பணிநேரம் இன்றி பெரியா ரின் சிலைக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.
பின்னர் சிலை முன்பு புகைப்படமும் எடுத்துக் கொண்டு சமூக வலைதளத் தில் பகிர்ந்திருக்கிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள இயலாதவர்களாலும் சமூக சீர்திருத்தத்தை விரும்பாத நபர்களின் கைக்கூலியாக மாறிய தமிழக அரசால் இந்த மூன்று காவலர்களும் பணி இட மாற்றத்திற்கு தள்ளப் பட்டுள்ளார்கள்.
இந்த மூன்று காவலர் களில் இருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஒரு வர் பிற்ப்படுத்தப் பட்ட வகுப் பைச் சார்ந்தவர். காவலர் மூவரும் பணி வரம்பை எவ் விதத்திலும் மீறாத வகையில் பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் இந்த மூவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு பணியாற்றி வந்த தோடு இந்த மூவரும் பணி சமயத்தில் எவ்வித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்கள் என்பதில்லாமல் ஜாதி ஒழிப்பிற்கு ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வந்துள்ளனர்.
சமூக சீர்திருத் தத்திற்காகவும் சமூக நீதிக்காக தன் வாழ்ந்த நாட்களை அர்ப் பணித்த தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மரி யாதை செய்தது எப்படி குற்றமாகும்? இதை காரணம் காட்டி பணி இட மாற்றம் செய்வது ஏற்க்கத் தக்கதல்ல - இது சமூக ஜனநாயக வரலாற்றிற்க்கு முரண்பட்ட நடவடிக்கையாகும். தமிழக முதல்வர் எடப்பாடியின் நேரடி கட்டுப்பாட்டில் இயங் கும் காவல்துறையால் அனுப்பிய இந்த பணி இட மாற்ற ஆணையை உடனே ரத்து செய்து மூன்று காவலர்களை யும் அதே காவல் நிலையத்தில் பணியாற்ற உரிய உத்தரவு ஆணை உடனே பிறப்பிக்க தமிழக அரசை ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.
இவ்வாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் இரா.அதியமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment