கொல்கத்தா, அக்.29 மேற்கு வங்காளத்தில் துர்கா சிலை கரைப்பின்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த பக்தர்கள் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
மேற்கு வங்காளத்தில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்கள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து பூஜைக்கு வைக்கப் பட்ட துர்கா சிலைகள் நீர் நிலை களில் கரைக்கப்படுகின்றன.
அந்த வகையில் முர்சிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பெல் டங்காவில் துர்கா சிலை ஒன்றை ஆற்றில் கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அங்கு 2 படகுகளில் அந்த சிலையை வைத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென அந்த படகுகள் கவிழ்ந்தன.
இதில் படகில் இருந்த பக் தர்கள் நீருக்குள் சிலைக்கு அடி யில் சிக்கிக்கொண்டனர். இதில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந் தனர். ஒருவர் காணாமல் போய் விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர்வாசிகளும், காவல்துறையினரும் ஆற்றில் இறங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட் டனர்.
மேலும் காணாமல் போன வரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment