வேதாரண்யம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் படத்திறப்பு - நினைவகம் திறப்பினை (16.10.2020)மாலை 4.50 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலியில் திறந்து வைத்தார்கள். ஆயக்காரன்புலத்தில் அவர்களின் சொந்த இடத்தில் தொழிலதிபர் அண்ணன் ஏ.கே.எம் அவர்களின் நினைவிடம் அருகாமையில் மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் உடல் புதைக்கப்பட்டு அந்த இடத்தில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சிசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி மாவட்ட தலைவர் கி.முருகையன், பகுத்தறிவாளர் கழக தலைவர் புயல் சு.குமார், மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் தி.குணசேகரன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சு.சித்தார்த்தன், வேதை ஒன்றிய தலைவர் தெ.ஆறுமுகம் ஒன்றிய செயலாளர் சி.பஞ்சாபகேசன், கோடியக்கரை சு.வீ.ஜவகர் மற்றும் ஏராளமான அனைத்து கட்சி தோழர்களும் கலந்து கொண்டு நினைவேந்தல் புகழுரை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment