பெரியார் மணியம்மை அறிவியல் கல்வி நிறுவனத்திற்கு அய்ந்து நட்சத்திர மதிப்பீடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

பெரியார் மணியம்மை அறிவியல் கல்வி நிறுவனத்திற்கு அய்ந்து நட்சத்திர மதிப்பீடு!

தேசிய நவீனக் கண்டுபிடிப்பு நாளன்று  நவீன கண்டுபிடிப்புகளில் முதலிடம் பிடித்த  பெரியார் மணியம்மை தொழில் நுட்ப கல்வி நிறுவனம்



தஞ்சை, அக். 23  ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதற்கு தரவரிசை மதிப்பீடு செய்யப்படும். இதில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு அய்ந்து நட்சத்திர மதிப்பு மத்திய அரசின் மனித வளத்துறை- கல்வி அமைச்சகத்தால் வழங்கப் படும்.  மத்திய கல்வி அமைச்சர் முனைவர் ரமேஷ் நிஷாங்க் போக்ரியால் தேசிய நவீன கண்டுபிடிப்பு நாளையொட்டி 15.10.2020 அன்று பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்  நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கு  சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான அய்ந்து நட்சத்திர மதிப்பு கொண்டதாக அறிவித்தார்.


2019-2020 ஆண்டில் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் மனிதவளத்துறை (தற்போது கல்வி அமைச்சரகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அமைச்சரகம் அதன் கல்வித்தரம், கற்றல் செயல்திறம், மாணவர்கள் நலன், சூற்றுச்சூழல் பேணல்  உள்ளிட்ட பல செயல்பாடுகளை ஆய்வு செய்து, இதனோடு முந்தைய ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஒப்பீடு செய்து அய்ந்து நட்சத்திர புள்ளிகள் வழங்கும்.



இதனடிப்படையில் பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தல், கற்றுத்தருவதில் நவீனமயம் மற்றும் சிறந்த கற்றல் திறன் போன்றவற்றில் புதுமைகளைப் புகுத்தியுள்ளது.


 இக்கல்வி  நிறுவனத் தலைமை,  நவீன கண்டுபிடிப்புகளுக்கானகுழுக்களை அமைத்து, அதற்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது.  இந்த ஆலோசனைக்குழுவில் பேரா சிரியர்கள் மற்றும்  ஆய்வு மாணவர்கள் இணைந்துள்ளனர்.  இக்குழு அண்மையில் 16 புதிய கண்டுபிடிப்புகளை தங்களது அறிவியல் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.  அதில் 4 ஆய்வறிக்கைகள் நாடு முழுவதும் உள்ள   பல முக்கிய அறிவியலாளர்களது பாராட்டுதலைப் பெற்றுள்ளது.


இத்தொழில் நுட்ப நிறுவனம் தங்களது கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கை குறித்து ஓராண்டில் மட்டும் 116 நூல்களை வெளி யிட்டுள்ளது.  பெரியார் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் ‘‘பெரியார் தொழில் நுட்ப கண்டு பிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தும்  தனிப் பிரிவு” ஒன்று  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


 இங்கு பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொள்ள அனைத்து வசதி களையும் ஏற்படுத்தி அவர்களின் ஆய்வுகள் தொடரவும், ஆக்கப்பூர்வமான தொழில் நுட்ப உதவிகளைச் செய்து வருகிறது.   மேலும் பன் னாட்டளவில் தலைசிறந்த தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து தொடர் தொழில் நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு (Hackathon) தங்களது கண்டுபிடிப்புகளை மேம்படுத்தி வருகிறது.


மாணவர்கள் தங்களது கண்டுப்பிடிப்பு களை மேம்படுத்துவதற்கு உதவியாக  பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைகழகம் அவர்களுக்குத் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி, அவர்களோடு இணைந்து செயலாற்றி அவர்களை ஊக்குவித்து வருகிறது.


  இக்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பன்னாட்டளவில் நடக்கும் அனைத்துப் போட் டிகள் மற்றும் பல்வேறு ஆய்வுக் கருத்தரங் கங்களில் கலந்துகொண்டு தங்களின் கண்டு பிடிப்புகளை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர்.


இக்கல்வி நிறுவனத்தின் இணைப் பேரா சிரியர் மற்றும் நவீன கட்டடக் கலை வடி வமைப்புப் பிரிவுத் தலைவர்  என்.ரமேஸ் பாபு.


இணைப் பேராசிரியர் மற்றும்  தொழில் முனைவு நிர்வாகக் கல்வித்துறை பேராசிரியர் பி குரு,


இணைப் பேராசிரியர் மற்றும்  வேதியியல் துறை  முனைவர் முகமது தானீஷ்,


இணைப் பேராசிரியர் மற்றும் மென் பொருள் வர்த்தகப்பிரிவு   முனைவர் எஸ். குமரன்  போன்றோருக்கு மனிதவளத்துறை-  கல்வி அமைச்சகம் பதக்கங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.


பெரியார் மணியம்மை தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இந்த அய்ந்து நட்சத்திரத் தகுதியானது  பேரசிரியர்கள்- மாணவர்கள் அனைவருக்கும் மேலும் பல புதிய ஆய்வுகளைக் கண்டுபிடிக்க பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. என்று பல்கலைக் கழக இணை வேந்தர் எஸ் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment